Monday, April 16, 2018

தினமணியில்

காரைக்குடி கம்பன் திருவிழாவில் 4 பெண்களுக்கு விருது

காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றுவரும் கம்பன் திருவிழா- முத்துவிழாவில் 2-ம் நாள் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் " கம்பன் காலம் முதல் கணினி யுகம் வரை' பழைய சுவடுகளில் புதிய தடங்கள் பதித்த 4 பெண்களின் சேவையைப் பாராட்டி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மனித்தேனீ இரா. சொக்கலிங்கம் தலைமை வகித்து முத்து விழா விருது வழங்கிப் பேசினார். எழுத்துத்துறையில் பாரதி விருதுபெற்ற திரைப்பட பாடலாசிரியர் தமயந்தி, இசைத்துறையில் இசையாசிரியர், இசைவல்லுநர் என்ற சிறப்புக்குரிய தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பிரமீளா குருமூர்த்தி, குறும்பட இயக்குநர் பரமக்குடி மாலினி ஜீவரத்தினம், பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டி கிராமத்தில் இலவச ஆட்டிசம் பயிற்சிப் பள்ளி தொடங்கி தன்னலம் கருதாத தொண்டுக்காக சரண்யா - பாபு பிரசாத் இணையர் ஆகியோருக்கு முத்து விழா விருது வழங்கப்பட்டன. விழாவில் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன், பேராசிரியர்கள் சொ. சேதுபதி, மு. பழனியப்பன், மா. சிதம்பரம், கம்பன் கழக துணைத் தலைவர் அரு.வே. மாணிக்கவேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

No comments :

Post a Comment