Wednesday, December 4, 2019

அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி


காரைக்குடி கம்பன் கழகத்தின் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி 4 1 20 அன்றுகாரைக்குடி கார்த்திகேயன் பள்ளியில் இரண்டரை மணிக்கு நடைபெற உள்ளது கல்லூரி மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்

காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் ஆறு ஏழு எட்டு ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கருக்கான ஒப்பித்தல் போட்டி

காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் ஆறு ஏழு எட்டு ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கருக்கான ஒப்பித்தல் போட்டி ஜனவரி நான்காம் தேதி நடைபெற உள்ளது காலை ஒன்பதரை மணிக்கு தொடங்கும் இந்நிகழ்ச்சியில் அனைத்து பள்ளி மாணாக்கர்களும் கலந்து கொள்ளலாம். அறிவிப்பும் பாடலும் கீழே இணைப்பில் உள்ளது வருக கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்ப்போம்



Friday, September 6, 2019

"கம்பவாணர்" கோவிந்தசாமி முதலியார் கம்பனடி சார்ந்தார்.

"என்றுமுள தென்றமிழை இயம்பியிசை கொண்ட கம்பன் புகழ்பாடி நூற்றாண்டு கண்ட "கம்பவாணர்" கோவிந்தசாமி முதலியார் கம்பனடி சார்ந்தார்.
கம்பன் பணிக்கென்றே தம்மை ஒப்புக்கொடுத்து, கம்பன் அடிப்பொடி சா.கணேசன் அவர்களுடன் இணைந்து இவர்செய்த திருப்பணிகள் மறக்கொணாதவை. காரைக்குடி கம்பன் கழகம், கம்பன் பிறந்த தேரழுந்தூரில் விழா எடுத்த முதலாண்டில், கோவிந்தசாமி முதலியாரவர்கள், "கம்பன் ஊர்வலத்தை" ஆமருவியப்பன் ஆலய வாயிலிலிருந்து, "கம்பன் வாழ்க!" எனச் சொல்லித் தொடங்கிவைத்து, நடந்துவந்ததும், மறக்க இயலாதவை. புதுவை மண்ணின் "கம்பநட்சத்திரம்" மண்ணிலிருந்து விண்ணேகி ஒளிரத் தொடங்கிய நாள் இதுவென்று வரலாறு குறித்துக்கொள்ளும்!

அன்னார்க்குப் புகழ்மாலை சூட்டிப் பணிகிறது காரைக்குடி கம்பன் கழகம்!


Tuesday, July 30, 2019

கம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாள் விழா


காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் 28.7.2015 அன்று கம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாள் விழா நடைபெற்றது. இதில் காப்பியக் கவிஞர் நா. மீனவன் அவர்கள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. மேலும் சாகித்திய அகாதமியின் பால புரஸ்கார் விருது பெற்ற திருமதி தேவி நாச்சியப்பன் அ்வர்களுக்கும் சிறப்பு செய்யப்பெற்றது.

Saturday, March 9, 2019

No photo description available.

காரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன் திருவிழா 2019 அழைப்பிதழ்









அன்புடையீர் 
வணக்கம்
இதனுடன் காரைக்குடி கம்பன் கழகம்  கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடக்கும் கம்பன் திருவிழா (2019) வின் அழைப்பிதழ் அனுப்பியுள்ளோம். தங்களை அன்புடன் அழைக்கின்றோம். விழா பொலிவு பெற வருக.