Wednesday, March 22, 2017

காரைக்குடி கம்பன் கழக ஆண்டுவிழா, திருவிழா அழைப்பு

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்
நாள்: 7- 4 - 2017, மகநாள், வெள்ளிக்கிழமை, மாலை 5.00 மணி
இடம்: கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி , காரைக்குடி
தலைவர்:  பேராசிரியர் தி. இராசகோபாலன்
இறைவணக்கம்             :திருமதி லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி
மலர் வணக்கம்            : திருமதி ராதா ஜானகிராமன்
கம்பன் அடிப்பொடி அஞ்சலி
வரவேற்புரை               : திரு கம்பன் அடிசூடி
தொடக்கவுரை              : பேராசிரியர் ந. விஜயசுந்தரி
கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் எழுதி வானதி பதிப்பகம் வெளியிடும்
மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளைச் சொற்பொழிவு நூல் கைகேயி படைத்த கம்பன் வெளியீடு : திரு. நாஞ்சில் நாடன்
அமெரிக்கன் கல்லூரி மேனாள் துணை முதல்வரும், கணினித் துறை இயக்குநருமான முனைவர் ப. பாண்டியராஜா அவர்களுக்கு அவர்தம் கம்பராமாயணம் தொடரடைவு (www. tamilconcordance.in) பணிகளைப் பாராட்டி கம்பன் கழகம் பணிவுடன் அளிக்கும் காரைக்குடி தெ. இலக்குவன் நினைவைப் போற்றி அவர்தம் குடும்பத்தார் நிறுவியுள்ள கம்பன் அடிப்பொடி விருது வழங்கிப் பாராட்டு         : சாகித்திய அகாதமி விருதுபெற்ற
                                  எழுத்தாளர் திரு நாஞ்சில் நாடன்
கம்பனின் இராம வண்ணம்       ஸ்ரீவில்லிப்புத்தூர் திரு. பி. ராஜாராம்
மாணக்கர்களுக்குப் பரிசளிப்பு           திருமதி வள்ளி முத்தையா
தலைமை உரை                 பேராசிரியர் தி. இராசகோபாலன்
காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்
நாள்: 8 - 4 - 2017, பூர நாள், சனிக்கிழமை, மாலை 5.30 மணி
இடம்: கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி , காரைக்குடி
                          
தனிப்பேருரை
கம்பனின் கருத்து வண்ணம்
சிந்தனைச் சிற்பி
திரு. பழ. கருப்பையா
கவியரங்கம்
தலைவர்
கவிச்சுடர் கவிதைப் பித்தன்
தலைப்பு:
கம்பனின் கவி வண்ணத்தில்
பொருள்                     கவிவாணர்
               அன்பு                 திரு. அ.கி. வரதராஜன்
               அறம்                திரு கிருங்கை சேதுபதி
               தோழமை            திரு. தஞ்சை இனியன்
               தொண்டு             திரு. வீ.கே. கஸ்தூரிநாதன்
               காதல்                திரு. வீ.ம. இளங்கோவன்
               வீரம்                 திரு வல்லம் தாஜ்பால்
காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்
நாள்: 9 - 4 - 2017, உத்தர நாள், ஞாயிற்றுக்கிழமை, காலை 9.30 மணி
இடம்: வள்ளல் அழகப்பர் அவர்தம் பேத்தி கவிதாயினி வள்ளி முத்தையா அவர்களின் பாரம்பரியமான நூற்றாண்டு கடந்த செட்டிநாட்டு இல்லம் கோட்டையூர்
செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பிலான
உலகத் தமிழ் பன்னாட்டுக் கருத்தரங்கம் - தொடக்கவிழா
தலைமை   : திரு. இராஜாமணி முத்துக்கணேசன்
வரவேற்புரை: திரு கம்பன் அடிசூடி
தொடக்கவுரை: செட்டிநாட்டு இளவல் செட்டிநாடு குழும நிர்வாக இயக்குநர்
திரு எம்.ஏ. எம் ஆர். முத்தையா
சிங்கப்பூர் கவிஞர் திரு. அ.கி. வரதராஜன் எழுதிய வானதி பதிப்பகம் வெளியீடான அரிய மாமனிதர் அழகப்பர் கவிதைநூல் வெளியீடு:
கவிதாயினி வள்ளி முத்தையா
முதற்பிரதியினைப்  பெற்றுத் தலைமைஉரை நமது செட்டிநாடு இதழ்ப் புரவலர் செட்டிநாடு சிமெண்ட்ஸ் இயக்குநர் திரு. இராஜாமணி முத்துகணேசன்
ஏற்புரை: கவிஞர் திரு. அ.கி . வரதராஜன்
மையக் கருத்துரையும் ‘செட்டிநாடும் செந்தமிழும்’ ஆய்வுக்கோவை வெளியீடும்
திரைப்பட இயக்குநர் திரு. கரு. பழனியப்பன்
முதற்பிரதியினைப் பெற்று வாழ்த்துரை: திரு.அரு.வே. மாணிக்கவேலு
முற்பல் 11 மணி மதல் உணவு இடைவேளை வரை பேராளர்கள் ஐந்து அமர்வுகளாக வெவ்வேறு இடங்களில் தத்தம் கட்டுரைகளை அறிமுகப்படுத்திச் சுருக்கத்தினை மட்டும் வாசித்தளிப்பர்
காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்
நாள்: 9 - 4 - 2017, உத்தர நாள், ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 3.00  மணி
இடம்: வள்ளல் அழகப்பர் அவர்தம் பேத்தி கவிதாயினி வள்ளி முத்தையா அவர்களின் பாரம்பரியமான நூற்றாண்டு கடந்த செட்டிநாட்டு இல்லம் கோட்டையூர்
செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பிலான
உலகத் தமிழ் பன்னாட்டுக் கருத்தரங்கம் – நிறைவு விழா
இறைவணக்கம்
வரவேற்புரை
 பேராசிரியர் மா. சிதம்பரம்
தலைமையுரையும்
சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்குப் பரிசு வழங்குதலும்
தகைமிகு தஞ்சாவூர் மூத்த இளவரசர்
திரு. பாபாஜி ராஜாசாகிப் போன்ஸ்லே
நிறைவுரை
கவிஞர் திரு. சொ. சொ. மீ. சுந்தரம்
நன்றியுரை
பேராசிரியர் செ. செந்தமிழ்ப்பாவை

(கருத்தரங்கிற்கு வரும் கட்டுரையாளர்களுக்கும், நோக்கர்களுக்கும் மதியஉணவு ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது)

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்
நாள்: 9 - 4 - 2017, உத்திர நாள், ஞாயிற்றுக் கிழமை, மாலை 5.30 மணி
இடம்: கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி , காரைக்குடி
பட்டிமண்டபம்
நடுவர்: சொல் வேந்தர் திரு. சுகி.சிவம்
தலைப்பு
இராமனுக்கு மிகுதியும் இக்கட்டான சூழலை உண்டாக்கியவர் யார்?
கைகேயியே!
பேராசிரியர் து. ருக்மணி,
செல்வி நா. ஹேமலதா,
பேரா சுமதிஸ்ரீ
சுக்ரீவனே!
பேராசிரியர் புனிதா ஏகாம்பரம்,
திரு.த.க. தமிழ்பாரதன்,
பேரா. தமிழ்திருமால்
வீடணனே!
தமிழாகரர் பழ. முத்தப்பன்,
திரு. சு. சதீஸ்குமார்,
பேரா. மா.சிதம்பரம்

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்
நாள்: 10 - 4 - 2017, அத்தத் திரு நாள், திங்கட் கிழமை, மாலை 5.00 மணி
இடம்: நாட்டரசன் கோட்டை, கம்பன் அருட்கோவில்
தலைவர் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
கம்பன் அருட்கோயில் வழிபாடு
மலர் வணக்கம் திரு. ஜி.எஸ். வி. பைரவ குருக்கள்
கம்பன் அருட்கவி ஐந்து
அமிர்தவர்ஷினி இசைப்பள்ளி ஆசிரிய மாணாக்கர்
இயக்கம் திரு. த. வெற்றிச்செல்வன்
இறைவணக்கம்
வரவேற்புரை
திரு. கண. சுந்தர்
தலைவர் உரை
‘‘கம்பனின் ஆற்றல் வண்ணம்’’
திரு. வி. யோகேஷ்குமார்
‘‘கம்பனின் பாத்திர வண்ணம்’’
திரு. இரா. மாது
நன்றியுரை பேரா. மு.பழனியப்பன்

வாழிய செந்தமிழ்

காரைக்குடி கம்பன் திருவிழா 2017 அழைப்பிதழ்

காரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன்திருவிழா எதிர்வரும் ஏப்ரல் 7, 8,9,10 ஆகிய நாள்களில் காரைக்குடி, கல்லுக்கட்டி கிருஷ்ணா திருமண மண்டபத்தில் முத்தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்ள இலக்கிய வேள்வியாக நடைபெற உள்ளது. அதன் அழைப்பினை இதனுடன் இணைத்துள்ளோம்.அவசியம் தாங்கள் அனைத்துநாள்களிலும் கலந்து கொண்டுகவிச் சுவை பருக அன்புடன் வேண்டுகிறோம். 






Sunday, March 19, 2017

காரைக்குடி கம்பன்கழகத்தின் மாதக்கூட்டம் 4.3.2017

காரைக்குடி கம்பன்கழகத்தின் மாதக்கூட்டம் 4.3.2017 அன்று பட்டிமன்றமாக மலர்ந்தது. புதுவிதமாக பங்கேற்றவர் அனைவரும் அம்பத்தூர் கம்பன் கழகத்தின் உறுப்பினர்கள்.
Vinaitheerthan Vino added 12 new photos — with கம்பன் கழகம் அம்பத்தூர்.
காரைக்குடி கம்பன்கழகத்தின் மாதக்கூட்டம் 4.3.2017 அன்று பட்டிமன்றமாக மலர்ந்தது. புதுவிதமாக பங்கேற்றவர் அனைவரும் அம்பத்தூர் கம்பன் கழகத்தின் உறுப்பினர்கள். நிறுவனர், தலைவர் உட்பட ஒன்பது பேர் அம்பத்தூரிலிருந்து வந்திருந்தனர். நான் அம்பத்தூர் கம்பன் கழகத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்பதால் அனைவரையும் பார்த்து மிக மகிழ்ந்தேன். கலந்து உரையாடினேன்.
பேராசிரியர் மு.பழநியப்பன் வரவேற்புரை நல்கினார். அம்பத்தூர கம்பன் கழக நிறுவனர் திரு எம்.எஸ்பி.அருணாசலம் செட்டியார், தலைவர் திரு பழ.பழநியப்பன், புலவர் உ.தேவதாசு, பேச்சாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். பட்டிமன்றத்திற்கு நடுவராக புலவர் உ.தேவதாசு வீற்றிருந்தார்.
'இராமனின் வெற்றிக்குப் பெரிதும் உதவியவர் அநுமனே' என்ற அணியில் திரு சே.பழ. விசுவநாதன், திரு தங்க. ஆரோக்கியதாசன், திரு சு.சங்கர் வாதிட்டனர். சீதையைக் கண்டு கணையாழி கொடுத்துத் துன்பம் நீக்கியது, இராமனிடம் கற்பினுக்கு அணியைக் கண்டுவந்து உரைத்தது, மருந்து மலை கொணர்ந்து இளையபெருமாள் வாட்டம் நீக்கியது, போரில் தேராகத் தோள் தந்தது, இறுதியில் பரதனிடம் சேதி சொல்லி 'எரியைக் கரியாக்கி' பரதன் உயிர்காத்தது அனைத்தையும் அழகாக எடுத்துரைத்தனர். அனுமன் செய்த உதவிக்கு ஈடில்லையென்பதை உணர்த்தத் தன்னையே இராமன் தந்தது போல 'புல்லுக' என்று அணைத்துக்கொள்ளச் சொல்லுகிறான் என்று கூறினர்.
'இராமனின் வெற்றிக்கு பெரிதும் உதவியவர் வீடணனே' என்ற அணியில் திரு கிளக்காடி வே.முனுசாமி, திரு இரா.இராசகோபாலன், திரு ஓ.லால்சுரேஷ் பாபு வாதிட்டனர். போரில் ஒவ்வொரு கட்டத்திலும் வெல்லும் வழி சொல்லி உதவியவன் வீடணன். 'இது வீடணன் தந்த வெற்றி' என்று இராமனே கூறிவிட்டான் என்று அருமையாக வாதிட்டனர். பட்டிமன்றப் பேச்சாளர்கள் அனைவரும் தமிழ்த்துறை சாராதவர்கள் என்பது சிறப்பு!
பட்டிமன்ற நடுவர் நண்பர் புலவர் உ.தேவதாசு அவர்களின் தீர்ப்பு அனைவரையும் பெரிதும் கவர்ந்தது. இராமனின் அவதார நோக்கமே இராவணன் வதமும், நல்லவர்களை காத்தலும் தான். மற்றவையெல்லாம் துணைக் காரணங்கள். வெற்றி என்பதே போரில் வெற்றி தான் எனபதைக் கம்பனிலிருந்து பல பாடல்களை எடுத்துக்கூறி நிறுவினார். அதற்கு அனுமனும் பிறரும் உதவியிருந்தாலும் வெற்றிக்குப் பெரிதும் காரணம் வீடணனே என்று தீர்ப்பு நல்கினார்.
பிறகு பேராசிரியர் திரு மு.பழநியப்பன் காணொலி மூலம் பேரா. பாண்டியராஜா அவர்கள் கட்டமைத்துள்ள கம்பராமயணத் தொடரடைவு தளமான tamilconcordance.in தளத்தை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஒரு தொடர் மூலத்தில் எங்கெங்கலாம் உள்ளது என்பதைக் காட்டும் தளம் இதுவாகும். இதேபோல சங்க இலக்கியங்களுக்கு பேரா.பாண்டியராஜா sangacholai.in தளம் அமைத்துள்ளதைச் சுட்டினார். நண்பர்கள் இவ்விரு தளங்களையும் பார்த்துப் பயன்கொள்ள வேண்டுகிறேன்.
பேரா திரு சிதம்பரம் நன்றி கூற சுவையான விருந்துடன் விழா இனிது நிறைவுற்றது.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

Thursday, March 9, 2017

செட்டிநாடும்செந்தமிழும் கருத்தரங்கக் கட்டுரைத் தலைப்பு விபரம்

எண்
பெயர்
கட்டுரை
கட்டணம்
1
தமிழ்த் திருமால்
செட்டி நாடு செதுக்கிய செந்தமிழ்மணி
பெறப்பட்டது
2
மீ. கண்ணன்
பாமரன் பார்வையில் செட்டிநாட்டுச் செந்தமிழ்க் கம்பன் விழா

3
காப்பியக்கவிஞர் மீனவன்
கோவிலூர் வேதாந்த மடம்
பெறப்பட்டது
4
இன்னம்பூரான்
செட்டிநாட்டு நகர்த்தார் பற்றிய பெண்ணின் நாட்குறிப்பு
பெறப்பட்டது
5
அ. மீனாட்சி
முடியரசன்

6
சே. செந்தமிழ்ப்பாவை
கம்பன் பிள்ளைத்தமிழும் கம்பனடிப்பொடி பிள்ளைத்தமிழும்
பெறப்பட்டது
7
வெ.திருவேணி
கண்ணதாசனும் தமிழும்

8
கு.அன்பு மெய்யப்பன்
கோவிலூர் ஆண்டவரின் சுவானுபவத் திருவாக்கு – ஒரு பார்வை

வரைவோலை
9
மு.சிவசுப்பிரமணியன்
மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் ஆற்றிய தமிழ்ப்பணிகளும்


10
முனைவர் பழ. முத்தப்பன்
புதுவயல் ஸ்ரீ சரசுவதி சங்கம்
பெறப்பட்டது
11
முனைவர் கா. கணநாதன்
வ.உ.சிதம்பரனாரின் தமிழ்ப்பணி

12
முனைவர் கா. கணநாதன்
பேராசிரியர் பூ. அமிர்தலிங்கனாரின் புள்ளின ஆய்வுத்திறம்

13
க. முத்துச்சாமி
செட்டிநாட்டு அரசர் செந்தமிழ் நாட்டுக்குச் செய்த அருந்தொண்டு

14
முனைவர் எம்.எஸ். ஸ்ரீலஷ்மி, சிங்கப்பூர்
செட்டிநாட்டுப் பெண் படைப்பாளிகள்
வரைவோலை
15
ந. முத்துமணி
வ.சுப. மாணிக்கனாரின் காப்பிய நேர்மை

16
முனைவர் பா. நாகஜோதி
வ.சுப. மாணிக்கனாரின் திருக்குறள் உரைத்திறன்

17
சத்யா அசோகன் () அ.சத்ய சாரதாமணி
யார் இந்த ஜீவா
வரைவோலை
18
முனைவர் நா. வள்ளி
உலகம் சுற்றிய தமிழர்
வரைவோலை
19
தேனம்மை லஷ்மணன்
வெ.தெ. மாணிக்கம் இயம்பும் அகத்திணையின் அகம்
பெறப்பட்டது
20
முனைவர் வி.ச.ஈஸ்வரி,

அர்த்தமுள்ள இந்துமதம் இயம்பும் மானுட வாழ்வியல்


21
வ. மீனாட்சி
வாக்கு வன்மை உடைய பாடுவார் முத்தப்பர்

22
சு. லாவன்யா
தேவகோட்டை நகரத்தார்களின் திருப்பணிகள்

23
க.கலைச்செல்வி
வ.சுப. மாணிக்கனாரின் நாடகத்திறன்

24
மனோ.இளங்கோ
மனோ.இளங்கோ எழுதிய குடை மகுடம்நூல் ஆய்வு

25
மு.செண்பகவள்ளி
தமிழண்ணலின் உரைத்திறன்

26
மா.உலகநாதன்
இலக்கியம் துலக்கிய ஏந்தல்

27
சே. கலையரசி
மாங்கனி காவியத்தில் கண்ணதாசன் கவித்திறம்
வரைவோலை
28
பொ.சக்திவேல்
கண்ணதாசன் திரையிசைப் பாடல்களில் காதல்மொழி
பெறப்பட்டது 
29
தமிழ்மதி நாகராசன்
நற்கல்வி வளர்த்திடும் நகரத்தார் பள்ளிகள்

30
கார்த்திக்
மாணிக்கச் செம்மலின் தமிழாக்க நெறிகள்

31
கா.சுபா
வ.சுப.மா.வின் ‘ஒரு நொடியில்’ நாடகத் தொகுப்பு உணர்த்தும் உண்மை

32
செ.நாகநாதன்
காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியின் தமிழ்ப்பயணம்

33
செ.பொன்மோனோலிசா
பட்டிணத்தார் போற்றிய தாய்மை

34
சி. பரமேஸ்வரி
கம்பர் காட்டும் அறநெறிகள்

35
சி.செயந்தி
கண்ணதாசனின் சிவப்புக்கல் மூக்குத்தி ஒரு பன்முகப் பார்வை
பணவிடை
36
கா. சிவகாமி
பண்டிதமணியின் தமிழிசைச் சிந்தனைகள்
பணவிடை
37
ஜீ. கௌசல்யா
சிதையா நெஞ்சு கொள், கண்ணதாசன் பார்வையில்
வரைவோலை
38
முனைவர் சுப. திண்ணப்பன்
சித்தாந்த வித்தகர் முரு. பழ ரத்தினம் செட்டியார்
பெறப்பட்டது
39
கவிஞர் அ. கி .வரதராஜன்
தன்னலம் போணத் தமிழாகரர்
காசோலை
40
முனைவர் சு.இராஜாராம்
தமிழ்க்கடல் இராய.சொ. வின் ஆழ்வார் அமுது உரைத்திறன்
பெறப்பட்டது
41
எம்.எஸ் ஸ்ரீலஷ்மி
 முருகு எனும் படைப்பாளி
காசோலை
42
எஸ்.எல்.எஸ் பழனியப்பன்
சன்மார்க்க சபையின் தமிழ்ப்பணிகள்

43
ப.சு. செல்வமீனா
பட்டிணத்தடிகள் அருளிய அருட்கோவை
தரப்பட்டது
44
சி. குரு. சண்முகாம்பாள்
கவிஞர் அர. சிங்கார வடிவேலனாரின் கவியரங்கக் கவித்திறன்
தரப்பட்டது
45
பா.லெட்சுமி
கவியரசன் முடியரசனார்
வரைவோலை
46
முனைவர் ஜீ. சுவேதா ஜீவானந்தம்
பட்டிணத்தடிகள்
வரைவோலை
47
தமிழ்மணி மானா மக்கீன்
தமிழ்வாணன்
வரைவோலை
48
இரா. வனிதா
முடியரசனாரின் ஊன்றுகோல்காப்பியம்
வரைவோலை
49
கம்பன் அடிசூடிபழ. பழனியப்பன்
தமிழை தலைநிமிரச்செய்த செட்டிநாட்டுத் தமிழர்கள்
பெறப்பட்டது
50
தெய்வானை பழனியப்பன்
செட்டிநாட்டில் தமிழால் மறுமலர்ச்சி
பெறப்பட்டது
51
சௌ.கீதா
கண்ணதாசன் பார்வையில் பெண்கள்
வரைவோலை
52
முனைவர் ந.பழனிவேலு
கம்பனில் மதுவிலக்குச் சிந்தனைகள்
வரைவோலை
53
ஆ. பால சரசுவதி
பாரதியாரின் ஆளுமைத்திறனும் செட்டிநாடும்
வரைவோலை
54
க.சத்யா
வீரனவனச் சிறப்புறைக்கும் வீரவனப் புராணம்
பெறப்பட்டது
55
அழ. முத்துப்பழனியப்பன்
செட்டிநாட்டுத்தாலாட்டு
வரைவோலை
56
விஜயன்
மனோ.இளங்கோ எழுதிய குடை மகுடம்நூல் ஆய்வு

வரைவோலை
57
மாணிக்கம்மாள்

வரைவோலை
58
உஷா

பணவிடை