Wednesday, April 29, 2020

பேச்சாளர்களுக்கு ஒரு வாய்ப்பு

கம்பன் கழகம், காரைக்குடி
பேச்சாளர்களுக்கு ஒரு வாய்ப்பு
படலம் ஒன்று! பேச்சு ஒன்று-!!
பேச்சுக் கலைஞர்களே! வணக்கங்கள்.
காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் கம்பராமாயணத்தைப் பேச்சுரைகளாக அளிக்க விரும்புகிறோம். முதல் முயற்சியாக பாலகாண்டத்தின் படலங்களைப் பேச்சுரைகளாக அளிக்க விரும்புகிறோம். 23 பேச்சாளர்கள் தேவை
பாலகாண்டத்தின் படலங்கள் பேச்சாளருக்கு ஒன்று என்ற அடிப்படையில் எடுத்துக்கொள்ளலாம்.
அவ்வாறு எடுத்துக் கொண்ட படலத்தின் செய்திகளை இருபது நிமிடங்களில் காணொளிப் பேச்சாகத் தாங்கள் அளிக்கவேண்டும். இப்பேச்சுரைக்குள் படலச் செய்திகள் முழுமையும் வரவேண்டும். ஒன்று அல்லது இரண்டு பாடல்களை மையமாக வைத்து முன்னும் பின்னுமாக படலத்தின் செய்திகளை நீங்கள் வழங்கவேண்டும். பேச்சினைத் தொடங்குகையில் காண்டம் மற்றும் படலத்தின் பெயரைச் சொல்லுங்கள். பாத்திரங்கள் பற்றிய விமர்சனங்கள் வேண்டாம். படலப் பொருள் போதும். விவாதம் வேண்டாம்
.
இதற்கான ஒப்புதலை 3-5-2019 ஆம் தேதிக்குள் நீங்கள் வழங்கினால் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்படும். இதனடிப்படையில் தாங்கள் யுடியுப் சானலில் தங்கள் காணொளியைப் பதிவு செய்து அந்த தொடுப்பை எங்களுக்கு வழங்கலாம். அந்தத் தொடுப்புகளை தொடுத்து, பாலகாண்டப் பேச்சுரையாக வழங்கத்திட்டம்.
தாங்கள் இப்போது செய்ய வேண்டியது எங்களுக்கு ஒப்ப்புதல் தரவேண்டியதுதான். படலத்தின் பெயரை நாங்கள் உங்களுக்குச் சொல்லி உங்களை எங்களின் குழுவோடு இணைத்துக்கொள்கிறோம். அடுத்த ஒரு வாரத்திற்குள் தங்களின் பேச்சுரை எங்களை வந்துசேரவெண்டும்.
அதன்பின் 10.5.2020 க்குள் பேச்சுரைத் தொகுப்பினை காரைக்குடி கம்பன் கழகம் வெளியிட வாய்ப்பு உள்ளது. தங்கள் தொகுப்பினை எங்கள் பொக்கிஷமாகப் பாதுகாப்போம். இந்தச் சிறுமுயற்சிக்குத் தங்களின் மேலான ஒத்துழைப்பு தேவை.
இதுகுறித்த கருத்துக்களை, விமர்சனங்களை, வழிகாட்டுதல்களை எதிர்பார்க்கிறோம். நன்றிகள்
கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம்.
கம்பன் வாழ்க! கம்பன் புகழ் வாழ்க!! கன்னித்தமிழ் வாழ்க. !!
இவண்
பணிவன்புள்ள
கம்பன் கழகத்தார் , காரைக்குடி
தொடர்பிற்கு 9442913985
muappalam2006@gmail.com
கம்பராமாயணம் - பால காண்டம்
படலங்களின் பெயர்கள் பின்வருமாறு.
0. கடவுள் வாழ்த்து
1. ஆற்றுப்படலம்
2. நாட்டுப்படலம்
3. நகரப்படலம்
4. அரசியற் படலம்
5. திரு அவதாரப் படலம்
6. கையடைப் படலம்
7. தாடகை வதைப் படலம்
8. வேள்விப் படலம்
9. அகலிகைப் படலம்
10. மிதிலைக்காட்சிப் படலம்
11. கைக்கிளைப் படலம்
12. வரலாற்றுப் படலம்
13. கார்முகப் படலம்
14. எழுச்சிப் படலம்
15. சந்திரசயிலப் படலம்
16. வரைக்காட்சிப் படலம்
17. பூக்கொய் படலம்
18. நீர்விளையாட்டுப் படலம்
19. உண்டாட்டுப் படலம்
20. எதிர்கொள் படலம்
21. உலாவியற் படலம்
22. கோலம்காண் படலம்
23. கடிமணப் படலம்
24. பரசுராமப் படலம்

No comments :

Post a Comment