Saturday, December 10, 2016

காரைக்குடி கம்பன் கழகத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் 2016




















காரைக்குடி கம்பன் கழகத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் 10.12.2016 அன்று மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. கவிதா மணிகண்டன் அவர்களின் இறைவணக்கத்துடன் விழா தொடங்கியது.
வரவேற்புரை
திரு கம்பன் அடிசூடி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இவ்வரவேற்புரையில் காரைக்குடி கம்பன் கழகத்தின் விழாக்களில் பங்குகொண்டவர் கலைத்தந்தை கரு. முத்து. தியாகராசன் அவர்கள். அவர்களின் கட்டுரைகள் அடங்கிய கட்டுரைத் தொகுப்பு இன்று வெளியிடப்பெறுகிறது. இதில் அவர் காரைக்குடியில் பேசிய பேச்சும் கட்டுரையாகத் தொகுக்கப்பெற்றுள்ளது. அவரின் கலைப்பரம்பரை இன்றும் காரைக்குடி - கம்பன் கழகத்தினோடு நெருங்கிய நட்பு கொண்டு விளங்குகிறது. எனவே கலைத்தந்தை கரு. முத்து. தியாகராசன் அவர்களின் கட்டுரைகள் அடங்கிய நூலை வெளியிடுவதில் கம்பனுக்கும் பெருமை. தமிழுக்கும் பெருமை என்று உரைத்தார்.
தலைமையுரை
இவ்விழாவிற்குத் தலைமை வகித்தவர் தஞ்சாவூர் மூத்த இளவரசர் தகைமிகு எஸ் பாபாஜிராஜாசாஹேப் போன்ஸலே சத்ரபதி அவர்கள்
அவர் கலைத்தந்தை கருமுத்து தியாகராசனார் எழுதிய கட்டு;ரைகளின் தொகுப்பினை வெளியிட்டுத் தன் தலைமையுரையை வழங்கினார்.
அதில் அவர் கலைத்தந்தை அவர்களின் கட்டுரைகள் அவர் கால தமிழ்நாட்டின்சூழலை எடுத்துரைக்கின்றன. குறிப்பாக இந்து சமய அறநிலைத்துறை பற்றிய அவரின் கருத்து அனைவரும் அறிந்து கொள்ளவேண்டியது. மக்கள் தம் துன்பம் தீர தேங்காய்களை கோயிலுக்கு முன் உடைத்து வழிபடுகின்றனர். இந்தச் சிதறுகாய்களை மற்றவர்கள் உண்ணவேண்டும் என்றுதான் அவ்வாறு மக்கள் செய்கின்றனர். ஆனால் அந்தச் சிதறுகாய்களையும் ஏலம் விடும் போக்கினை இந்து சமய அறநிலையத்துறை கைவிடவேண்டும் என்று அவர் தைரியமகா எழுதியுள்ளார் அவரின் தமிழ்த்தொண்டு, ஆலைப்பணி, கல்விப்பணி போற்றுதற்கு உரியது என்றார் அவர்.
சிறப்புரை
கருமுத்து தியாகராசன் அவர்கள் எழுதிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பான
ஆலைஅரசர் கருமுத்துத் தியாகராசனாரின் உரைக்கோவை என்ற நூலின் முதல்படியைப் பெற்றுக்கொண்டுச் சிறப்புரையாற்றினார்.
இவர் தன் உரையில் ஆலைஅரசரின் பண்புகளை அவரின் கம்பராமாயண ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.
கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் வாழ்க்கைப்படிப்பினைக் கற்றுக்கொள்வதில்லை. நிறைய மதிப்பெண்கள் வாங்குகிற அவர்களால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியவில்லை. இதற்குக் காரணம் என்ன? படிப்பை வெறும் படிப்பாக மட்டும் மாணவர்கள் கற்கிறார்கள். படிப்பினை கலை, நடனம், இசை கலந்து தரவேண்டும். ஏழிசையாய் இசைப்பயனாய் என்று தேவாரம் இசைவடிவில் ஆண்டவனைக் காண்கிறது. இக்கால இளைஞர்களின் வாழ்க்கை; மேம்பட கல்வி வெறும் மனப்பாடப்பகுதியாக இல்லாமல் மனிதத்தை வளர்க்கும் பண்பாடு,இசை, கலைத் திறன் கொண்டதாக இருக்கவேண்டும் என்றார்.
ஏற்புரை
திரு ஹரி தியாகராசன் அவர்கள் ஆலையரசர் கருமுத்து தியாகராசனாரின் உரைக்கோவை என்ற நூலைத் தொகுத்த தொகுப்பாசிரியர் ஆவார்.
இவர் தன் தாத்தாவைப் பற்றிப் பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். தாத்தாவின் பழைய பெட்டிகளில் உள்ள கணக்குகள், கட்டுரைகள் அவர் வாழ்வின் வெற்றிகளை அள்ளித்தந்தவையாகும்.
அவர் பல ஆலைகள் கல்வி நிறுவனங்கள் கோயில்கள் ஆகியவற்றை நிர்வகித்தவர்.
அவரின் கல்வி நிறுவனமொன்றில் அசைவ உணவு வழங்கவேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்து படிப்புநிறுத்தப் போராட்டத்தைச் செய்துவந்தனர். தங்களின் உடல்உழைப்பிற்கு ஏற்ற அசைவ உணவினை கல்லூரிச் சிற்றுண்டிச்சாலை, உணவகம் ஆகியவற்றில் வழங்கவேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையைக் கனிவாகக் கேட்டார் ஆலைஅரசர்.
அதன் பின் அவர்களிடம் பவர் power என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் தெரியுமா என்று கேட்டார். அதற்கு அவர்கள் பவர், எனர்ஜி ஆகியவற்றின் பொருள் எங்களுக்குத்தெரியும் என்றனர். சரி என்று கேட்டுக்கெர்ணடார் ஆலைஅரசர்.
அதன்பின் அவர்களிடம் பவரை எந்தக் குறியீட்டால் அளக்கிறீர்கள் என்றார்.அதற்கு மாணவர்கள் குதிரைத் திறன் என்பதாக அளக்கிறோம். அந்தக் குதிரை அசைவம் உண்கிறதா, சைவம் உண்கிறதா என்று கேட்டார். மாணவர்கள் தலை குனிந்தனர். மேலும் யானை அசைவ உணவு உண்கிறதா.. குதிரை, யானை போன்ற விலங்குகளே சைவ உணவால் சக்தி பெறும்போது மாணவர்களுக்கு மனிதர்களுக்குச் சைவ உணவே போதுமானது என்று அவர் எளிமையாக மாணவர்களிடம் தன் கொள்கையைக் காட்டி சைவ உணவே தன் கொள்கை என்பதை நிறுவினார்.
இதன்பிறகு முனைவர் மு.பழனியப்பன் நன்றியுரை வழங்க விழா இனிதேநிறைவு பெற்றது

No comments :

Post a Comment