Tuesday, December 29, 2015

2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதக் கூட்ட அழைப்பிதழ்

கம்பன் கழகத்தின் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதக் கூட்டம் எதிர்வரும்  ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது, 


அன்புடையீர்
வணக்கம்
கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும் கம்பன் திருவிழாவிற்கு பல்லாண்டுகளாகப் பெருங்கொடையளித்துப் புரவலராய் விளங்கிய பெருந்தகை, தொழிலதிபர் செட்டிநாட்டசர் டாக்டர் எம்.ஏ. எம் இராமசாமி அவர்களுக்கு நன்றி பாராட்டிப் புகழாரம் சூட்டும் முகமாக புத்தாண்டில் முதற் சிறப்புக் கூட்டம் 9-1-2016 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணன் கோயிலை அடுத்துள்ள கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறஉள்ளது, அவ்வமயம் அவர்களைப் பற்றி திரைப்பட இயக்குநரும் எழுத்தாளரும் ஆன கவிஞர் காரைக்குடி நாராயணன் ஆக்கிய டாக்டர் எம், ஏ.எம் ஒரு சகாப்தம் என்ற நூல் வெளியீடும் அவர்தம் திருவுருவப் படத்திறப்பும் நிகழ்கிறது. அன்பர்கள் யாவரும் கலந்துகொண்டு கன்னித் தமிழ் அமுதம் பருகி மகிழ்வித்திட வருக வருக. 

அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்








Thursday, December 24, 2015

அனைத்து கலை, அறிவியல், பொறியியல், தொழில்நுட்ப, கல்வியியல், கல்லூரிகளுக்கான போட்டி

 வணக்கம்இத்துடன் காரைக்குடி கம்பன் கழகம் காரைக்குடிகல்லுக்கட்டி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் 31-1-2016 ஆம் தேதி நடத்தும்இவ்வாண்டுக்கான தமிழக அனைத்து கலைஅறிவியல்பொறியியல்தொழில்நுட்பகல்வியியல்கல்லூரிகளுக்கான போட்டி அறிக்கையினையும்சிவகங்கைமாவட்ட உயர்நிலைமேல்நிலைப் பள்ளிகளுக்கான ஒப்பித்தல் போட்டிஅறிக்கையினையும் அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.

                 தங்களுக்கு தெரிந்தவர்கள்உறவினர்கள் வீட்டுப் பிள்ளைகளிடம் இவைபற்றி தெரிவித்து  மாணாக்கர்கள் அவர்கள் படிப்புக் கட்டணம்புத்தகங்கள்வாங்கும் செலவிற்கு உதவுகிறாற்போல் அதிக அளவில் ரொக்கப் பரிசுகளைப்பெற்றுப் பயனடைய உதவிடும்படி மிக்க பணிவன்புடன் வேண்டுகின்றோம்.தங்கள்  அறிவிப்பு பெற்றோர்களின் பாரத்தை இம்மழை வெள்ளப் பாதிப்புசமயத்தில் குறைப்பதற்கு பெருமளவில் உதவும்அவர்கள் தங்களுக்கும்தங்கள்பத்திரிக்கைக்கும் நன்றி பாராட்டுவர்.
              
                மேலதிக விபரம் வேண்டுவோர் அல்லது போட்டித் தயாரிப்பிற்கு விவரம்,குறிப்பு வேண்டினால் அஞ்சலட்டையில் பள்ளியா கல்லூரியா என்று குறிப்பிட்டு,தங்கள் வீட்டு அஞ்சல் குறிப்பு எண்ணுடனான முழு இல்ல முகவரியை, “கம்பன் கழகம்காரைக்குடி 2” என்ற முகவரிக்கு எழுதினாலோ அல்லது 94450 22137 என்ற கைபேசிக்கு குறுஞ்செய்தியில் (எஸ் எம் 




எஸ்அனுப்பினாலோஎங்கள் செலவில் அறிக்கைகளை முழு விபரங்களுடன் அனுப்பிவைக்கிறோம் என்ற செய்தியயையும் தெரிவித்து உதவ மிக்க அன்புடன்வேண்டுகின்றோம்.

               தாங்கள் இதுகாறூம் எங்கள் முயற்சிகளுக்கு அளித்துவந்தஉதவிகளுக்கும்  ஆதரவிற்கும் நன்றியும் வணக்கமும் ஏற்றருள்கஇத்தகுநட்பும்உதவியும் இனியும் தொடர அன்போடு நன்றி பாராட்டி வேண்டுவோம்.

                         தமிழ்ப் பணியில் தங்கள் பணிவன்புள்ள


                                     
                                       பழ பழனியப்பன்
                                         (செயலாளன்)-- 

Thursday, December 17, 2015

காரைக்குடியில் கம்பராமாயண திறனாய்வாளர்கள் இலக்கிய அரங்கம்


First Published : 17 December 2015 03:43 AM IST
காரைக்குடியில் கம்பராமாயணத் திறனாய்வாளர்கள் இலக்கியக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
சாகித்ய அகாதெமியும் காரைக்குடி கம்பன் கழகமும் இணைந்து காரைக்குடி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் இக்கருத்தரங்கை நடத்தின. இதில், சாகித்யஅகாதெமி ஆலோசனைக் குழு உறுப்பினர் பேராசிரியர் சொ. சேதுபதி பேசுகையில், படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும் இடையில் இலக்கிய அரங்கம் வாயிலாக உறவுப் பாலம் அமைத்துச் செயல்படும் சாகித்ய அகாதெமி, இந்திய மொழிகளின் வாயிலாக மனிதம் வளர்க்கிற இலக்கிய அவையாகும். உலக மானுடம் பாடிய கம்பன் கவி குறித்துத் திறனாய்வு செய்த தமிழறிஞர்கள் மிகப் பலர். அவர்கள் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள். வ.வே.சு. ஐயர் தொடங்கி கி.வா.ஜ, சொல்லின் செல்வர். ரா.பி. சேதுப்பிள்ளை, ரசிகமணி, ஜஸ்டிஸ் மகாராஜன், அ.ச. ஞானசம்பந்தன், அ.சீ.ரா, எஸ்.ஆர்.கே., ஜீவா போன்றவர்கள் கம்பனை எல்லார் மனங்களிலும் நிறைத்த திறனாய்வாளர்களாவர்.
ரசனை முறையிலும், ஒப்பீட்டு முறையிலும், அறிவியல் கோட்பாட்டு முறையிலுமாகப் பல்வேறு திறனாய்வுப் போக்குகளின் வழி ஏராளமான ஆய்வுகள் நூல்கள் தோன்றக் காரணமாக இருந்தது, காரைக்குடி கம்பன் கழகம்.
இங்கு வந்து பேசி வளர்ந்தவர்களே கம்பனின் திறனாய்வு நூல்களை மிகுதியும் உருவாக்கினர். அவர்களின் பணிகளையும் பார்வைகளையும் சிந்திப்பதற்காகவே இந்த இலக்கிய அரங்கம் என்று குறிப்பிட்டார்.
பின்னர், கம்பராமாயணத் திறனாய்வாளரான ஜஸ்டிஸ் மகாராஜன் குறித்து கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் கூறுகையில், கம்பனின் கவித்துவத்தைக் கற்றோர் மட்டுமின்றி, பாமரரும் உணரும் கம்பன் பாடல்களையே திரும்பத் திரும்ப, பாவனையோடு சொல்லி நடித்தும் காட்டுவார் ஜஸ்டிஸ் மகாராஜன் என்றார்.
கம்பன் புதிய பார்வை என்ற நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்ற பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தனைப் பற்றி பழ.முத்தப்பனும், சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை பற்றி முனைவர் யாழ்.சு. சந்திராவும் ஆய்வுரையாற்றினர்.
கம்பன் கழகத் துணைத் தலைவர் அரு.வே. அண்ணாமலை முன்னிலை வகித்தார். சிங்கப்பூர் தமிழறிஞர் ஸ்ரீ லெட்சுமி கருத்துரையாற்றினார். பேராசிரியர் ம.கார்மேகம், மெய்யாண்டவன், குன்றக்குடி ஆதீனக் கவிஞர் மரு.பரமகுரு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். முன்னதாக பேராசிரியர் மு. பழனியப்பன் வரவேற்புரை ஆற்றினார். முனைவர் செ. செந்தமிழ்ப்பாவை நன்றி கூறினார்.

Thursday, December 3, 2015

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டிகள்

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான இரு பேச்சுப் போட்டிகள். விபரம் இதனுடன் இணைக்கப்பெற்றுள்ளது. எங்கே பார்ப்போம் உங்கள் கல்லூரியில் இருந்து மாணவர்கள் வந்து சேரட்டும்.

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான போட்டிகள்

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான ஒப்பித்தல் போட்டிகள்

பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் இருநிலையில் நடத்தப்படுகின்றன.
பிரிவு -1
வகுப்பு 9 முதல் 12 வரை
யுத்தகாண்டத்தில் இணைக்கப்பெற்ற பாடல் பகுதி

பிரிவு 2
வகுப்பு 6.முதல் 8 வரை

அயோத்தியா காண்டத்தில் இணைக்கப்பெற்றுள்ள பகுதி










காரைக்குடி கம்பன் கழகத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் - சாகித்திய அகாதமியுடன் இணைந்து நடத்தும் இலக்கிய அரங்கம்

காரைக்குடி கம்பன் கழகமும் , சாகித்திய அகாதமியும் இணைந்து காரைக்குடி கிருஷ்ணா திருமண மண்டபத்தில் எதிர்வரும் 12 ஆம் தேதி மாலை ஆறுமணிக்கு கம்பராமாயணத் திறனாய்வாளர்கள் என்ற தலைப்பிலான இலக்கிய அரங்கத்தை நடத்துகின்றன. அதன் அழைப்பு பின்வருமாறு அனைவரும் வருக.

நிகழ்ச்சிக்கு சிற்றுண்டி தந்து உதவுபவர்
காளைாயர் மங்கலம் திரு எஸ் ஆர் எம் கண்ணப்பன் அவர்கள் 

காரைக்குடி கம்பன் கழகம் நடத்திய நவம்பர் மாதக் கூட்டம் (2015)





காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் ரசிகமணி டிகேசி பிள்ளைத்தமிழ் என்ற நூல் நவம்பர் மாதம் நடைபெற்ற  கூட்டத்தில் வெளியிடப்பெற்றது. இவ்விழாவிற்கு நீதிபதி மாண்பமை இராம சுப்பிரமணியனார் தலைமை தாங்கினார். விழாச் சிறப்புரையை ஞானவாணி தூத்துக்குடி இளம்பிறை மணிமாறன் அவர்கள் வழங்கினார். ஏற்புரையை திருமதி வள்ளி முத்தையா வழங்கினார்.  வரவேற்புரையைக் கம்பன் கழகச் செயலர் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் வழங்கினார்.