Saturday, September 5, 2015

காரைக்குடி கம்பன் கழகம், அந்தமானில் நடத்தும் கம்பராமாயணம் தொடர்பான மூன்றாம் பன்னாட்டுக் கருத்தரங்கு அறிவிப்பு மடல்

தாய்க் கழகமான காரைக்குடி,  கம்பன் கழகமும், கிளைக் கழகமான அந்தமான் கம்பன் கழகமும் இணைந்து நடத்தும்
கம்பராமாயணப் பன்னாட்டுக் கருத்தரங்கு 2016
அறிவிப்புமடல்
நிறுவன அறிமுகம்
கம்பனின் இராமாவதாரக் காப்பியத்தால் பெரிதும் ஈர்க்கப் பெற்று காரைக்குடியில் 1939 ஏப்பிரல் 2, 3 ஆகிய நாட்களில்  ரசிகமணி டி.கே.சிதம்பரநாதர் தலைமையில் கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் தம் வாழ்நாள் வேள்வியைத் தொடங்கினார் சா.கணேசன் எனும் காந்தியடிகளின் தொண்டர்அன்றிலிருந்தது தொடர்ந்துகாரைக்குடியிலிருந்து 30 கல் தொலைவில் உள்ள நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பன்சமாதிக்கோயில் வளாகத்தில் கம்பன் கவியரங்கேற்றிய பங்குனி அத்தத்திருநாளிலும்அதற்கு முந்திய மூன்றுநாட்களான பங்குனி மகம்பூரம்உத்திரம் ஆகியநாட்களில் காரைக்குடியிலும் கம்பன்திருநாளைக் கொண்டாடினார்.

      கம்பன் பிறந்த நாளை நாம் அறிய சான்றுகள் ஏதும் கிடைக்காததால்அவன்  தன் இராமாவதாரக் காப்பியத்தை அரங்கேற்றியதாக தனிப்பாடல் ஒன்றின் துணையால் அறிய நேர்ந்த கிபி 886, பெப்ருவரி 23 பங்குனி அத்த  நாளையே கம்பன் கவிச்சக்கரவர்த்தியாக அவதரித்த நாளாகக் கொண்டு  அந்நாளிலேயே கம்பன் திருநாளைக் கொண்டாடிவந்தார்கம்பன் அடிப்பொடியார் ஆண்டு தவறாது 44 ஆண்டுகள் தொடர்ந்து தம் வாழ்நாள் வரை (1982) கொண்டாடினார். 1983 முதல் அவர் விரும்பியவண்ணமே அவர்தம் தலைமாணாக்கரான கம்பன்அடிசூடியைச் செயலாளாராகக் கொண்டு அதேமுறையில் தொடர்ந்து 30 ஆண்டுகளாக நடத்திவந்து 2013ஆம் ஆண்டில் கம்பன் திருநாள் பவளவிழா  தொடக்கத்தையும்,  2014ஆம் ஆண்டில் பவளவிழா நிறைவையும் இரு பன்னாட்டுக் கருத்தரங்குகளைக் கம்பன் கழகம், காரைக்குடி நடத்திப் பெருமைபெற்றது.

          சாதிமதபதவிஅரசியல் சார்பு பேத மற்றுத் தமிழகத்தின் தலைசிறந்த  அறிஞர்கள் எல்லோரும் பங்கேற்ற தமிழ் இலக்கியவிழா இஃதொன்றேஇளந்தலைமுறையினரை இனங்கண்டு நாளைய அறிஞர்களாக உருவாக்கும்வண்ணம்தமிழகம் முழுதுமுள்ள கல்லூரி மாணாக்கர்களுக்கான கம்பராமாயணம்திருக்குறள் ஆகிய இலக்கியங்களில் பேச்சுகட்டுரைப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பெறுகின்றதுஇதன்வழி அடுத்ததலைமுறைப் பேச்சாளர்கள் உருவாகிவருகின்றார்கள்ஆண்டுதோறும் திரு கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் தம் பெற்றோர் மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளை ஆய்வுப்பொழிவு நிகழ்த்தப்பெறுகின்றது;. அவை நூலாகவும் வெளியிடப்பெற்றுள்ளன. டாக்டர் சுதா சேஷய்யன் (தாய்தன்னைஅறியாத), முனைவர் அ. அ. ஞானசுந்தரத்தரசு (கம்பனின் மனவளம்)திருமதி இளம்பிறை மணிமாறன் (கம்பனில் எண்ணமும் வண்ணமும்), முனைவர் பழ. முத்தப்பன் (கம்பனில் நான்மறை),முனைவர் ச. சிவகாமி (கம்பர் காட்டும் உறவும் நட்பும்)முனைவர் தெ. ஞானசுந்தரம் (கம்பர் போற்றிய கவிஞர்)நாஞ்சில்நாடன் (கம்பனின் அம்பறாத் தூணி), திருமதி இளம்பிறை மணிமாறன் (கம்பனில் விண்ணோடும் மண்ணோடும்), திரு, சோம. வள்ளியப்பன் (எத்தனை மேலாண்மை சூட்சுமங்கள் கம்பனிடம்), ஆகியோர் உரையாற்றி, அந்த உரைகள்,  அந்த  ஆண்டே வெளியிடப் பெற்றுள்ளன.  மாதந்தோறும் முதற் சனிக்கிழமைகளில் தக்க அறிஞர் ஒருவரோடு,  மாணாக்கர் / இளந்தலைமுறையினர் ஒருவரைக்கொண்டும் புதியகோணங்களில் கம்பன்காவியம் பற்றிய சொற்பொழிவுகள் நிகழ்த்தபெற்றுஅவை அச்சில் வெளிவர தொகுக்கப் பெற்றுவருகின்றனமுனைவர் சொ.   சேதுபதி (கம்பன்காக்கும்உலகு)முனைவர் மு.பழனியப்பன் (கம்ப வானியல்) ஆகிய நூல்களும் கம்பன் கழகத்தால் வெளியிடப்பெற்றுள்ளன.  
  
        கம்பன் உள்ளிட்ட தொல்காப்பியர் முதலான இலக்கிய வளங்களைக் கற்க ஓர் ஆய்வு  நூலகம் ஏற்படுத்திஅவற்றைக் கற்பிக்கவும் ,ஆய்வு நிகழ்த்துவோருக்கான பணியிடவசதிசெய்து , நெறிப்படுத்திசெம்மொழித்தமிழ் ஆய்வுகளை ஊக்கப்படுத்தவும் முயற்சிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றனஇம்முயற்சியின் ஒருகூறாகத்தான் இப்போது இப்பன்னாட்டுக் கருத்தரங்கம் அந்தமானில் ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது

       அந்தமானில் உள்ள கம்பன் கழகமும் இதற்கு ஆக்குமும் ஊக்கமும் கொடுக்க முன்வந்துள்ளது. இதன் காரணமாக கம்பன் புகழைக் கடல் கடந்து பரப்பும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. இக்கருத்தரங்கில் தாங்கள் கட்டுரை படைத்துப் பங்கேற்க அன்புடன் அழைக்கின்றோம்.

கருத்தரங்க நாளும், இடமும்,  நிகழ்வுகளும்
                இப்பன்னாட்டுக் கருத்தரங்கம் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 10 ஆம்தேதி முழு நாள் அளவில் அந்தமானின் தலைநகரமான போர்ட்பிளேயரில் நிகழ உள்ளது.இக்கருத்தரங்கில் கலந்துகொள்வோர்  ஏப்ரல் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை சென்னையில் தம் பயணத்தைத் தொடங்குவர். அன்று அந்தமான் சென்றடைந்து, மாலையில் சில சுற்றுலா இடங்களைக் காண்பது, மறுநாள் முழுவதும் அவரவர் சொந்தப் பொறுப்பில் சுற்றுலா செல்வது. அடுத்த நாள் முழுவதும் கருத்தரங்கம், ஏப்ரல் 11 மீளுதல் என்று இப்பயணத்திட்டம் வகுக்கப்பெற்றுள்ளது.

கருத்தரங்க மையப்பொருள்
                இயற்கை சூழ்ந்த அமைவிடமான அந்தமானில் இயற்கையைப் பேணிக்காக்கும் நிலையில் “கம்பனும் இயற்கையும்“ (Nature in KAMBAN) என்ற தலைப்பில் இப்பன்னாட்டுக் கருத்தரங்கு நிகழ்த்தப்பட உள்ளது. இம்மையப் பொருளை ஒட்டிப் பின்வரும் தலைப்புகளில் ஆய்வாளர்களிடமிருந்து ஆய்வுக்கட்டுரைகள் எதிர்பார்க்கப்பெறுகின்றன.

கருத்தரங்கக் குழுவினர்
                இப்பன்னாட்டுக் கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளராக முனைவர் இரா. குறிஞ்சி வேந்தன் அவர்கள் செயல்படுகிறார். அந்தமான் பகுதியின் ஒருங்கிணைப்பாளராக அந்தமான் கம்பன் கழகத்தின் தலைவர், திரு. டி.என். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் செயல்பட்டுக்கொண்டுள்ளார்கள்.  மேலும் காரைக்குடி கம்பன் கழகத்தின் நிர்வாகிகளான தலைவர் கவிமாமணி வள்ளி முத்தையாதுணைத் தலைவர்கள் திருஅரு.வேமாணிக்கவேலு, திருஇராமலிங்கம், திருமதி விசாலாட்சி கண்ணப்பன், செயலர் கம்பன் அடிசூடி பழபழனியப்பன், துணைச் செயலர் முனைவர் சொசேதுபதி, பொருளர் முனைவர் மு.பழனியப்பன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முனைவர் சேசெந்தமிழ்ப்பாவை, முனைவர் சிதம்பரம், திருமீசுப்பிரமணியம் திருமதி அறிவுச் செல்வி ஸ்டீபன் ஆகியோரும், கிளைக்கழகமான அந்தமான் கம்பன் கழகத்தின் நிர்வாகக்குழுவினரும் செயல்படுவர்.  

ஆய்வுத்தலைப்புகள்:
1.           கம்பனில் சுற்றுச் சூழல்
2.             கம்பனில்இயற்கை வளம்
3.             கம்பனில் இயற்கை நலம்
4.             கம்பனில் இயற்கைப் புனைவுகள்
5.             கம்பனில் இயற்கை வருணனைகள்
6.             கம்பன் புனைவில் நதிகள்
7.             கம்பன் படைப்பில் மலைகள்
8.             கம்பன் பார்வையில் மழை
9.             கம்பனில் தாவரங்கள்
10.           கம்பனில் மரங்கள்
11.           கம்ப காவியத்தில் விலங்குகள்
12.           கம்பன் புனைவில் பறவைகள்
13.           கம்பராமாயணத்தில் நீர் வாழ்வன
14.           கம்பகாவியத்தில் கானக வாழ்க்கை
15.           கம்பனில் சோலைகள்
16.           கம்பனில் குறிஞ்சி நிலவாழ்வு
17.           கம்பனில் மருதநில வாழ்வு
18.           கம்பனில் நெய்தல் நில வாழ்க்கை
19.           கம்பன் சித்திரிப்பில் பாலை
20.           கம்பன்காட்டும் இயற்கையோடு இயைந்த வாழ்வு
21.           கம்பனில் இயற்கை உணவுகள்
22.           கம்பன் படைப்பில் மூலிகைகள்
23.           கம்பனில் சூழலியல் சிந்தனைகள்
24.           கம்பராமாயணக் காப்பியப்போக்கும் இயற்கைக்காப்பும்
25.           கம்பனின் காப்பிய வளர்ச்சிக்குத் துணையாகும் இயற்கைச்சித்திரிப்பு
26.           கம்பன் சித்திரிப்பில் போரின் விளைவுகள்
27.           கம்பனில் இயற்கைச் சீற்றங்கள்
28.           கம்பனில் போரின் விளைவால் நிகழும் இயற்கைப் பேரழிவுகள்
29.           இயற்கை வருணனையில் கம்பனும் பிறமொழிக்கவிஞர்களும்
30.           இயற்கை வருணனையில் கம்பனும் பிற தமிழ்க்கவிகளும்

 31.   இயற்கை வருணனையில் கம்பனும் பிற மொழிக் கவிஞர்களும் என்கிற
      பொருண்மையில் ஷேக்ஸ்பியர்ஷெல்லிமில்டன்தாந்தேவெர்ஜில்   
      முதலிய பிறநாட்டு நல்லறிஞர் காப்பியங்களோடும் / கவிதைகளோடும்
      கம்பனைக் காப்பிய நோக்கிலும்கதையமைப்பிலும்பாத்திரப்படைப்பிலும்
      இன்னோரன்ன  கோணங்களிலும் ஒப்பீட்டறிதல்

32. இயற்கைப் புனைவுகளின் அடிப்படையில், இந்தியத் திருநாட்டின் தமிழ் உள்ளிட்ட பிற மொழிப்படைப்புகள்படைப்பாளர்களோடும் ஒப்பாய்வுக் கட்டுரைகள்

 நெறி முறைகள்:
1.        தமிழிலோ / ஆங்கிலத்திலோ வழங்கலாம்அவை வரவேற்கப்பெறும்.
2.        பல்கலைக்கழகம்கல்லூரிநிறுவனம் சார்ந்த பேராசிரியர்கள்ஆய்வுமாணாக்கர்கள் தங்கள் ஆய்வுக்கட்டுரையுடன்கல்லூரி / நிறுவன முழுமுகவரி ,தொலைபேசிஎண் / அஞ்சல்குறியீட்டு எண் விவரங்களை இணைத்தே அனுப்பி உதவிடுகமேற்குறித்த கல்விநிறுவனம் எதனையும் சாராத தமிழ் ஆர்வலர்களும் / இலக்கியச்சுவைஞர்களும்கம்பநேயர்களும்  கட்டுரைகளை அனுப்பலாம்.

3.        ஆய்வுக்கட்டுரைகள் முற்றிலும் பேராளார்களின் சொந்த ஆய்வுக்கட்டுரைகளாகவே இருத்தல்வேண்டும்கண்டிப்பாக பிறர் படைப்புக்களைத் தழுவியதாகவோகையாடியதாகவோமின் இணைய தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவோ இருத்தல்கூடாதுஅவ்வாறு இருப்பின் பதிவுக்கட்டணம் திருப்பியளிக்கமாட்டாது.  கூறப்பெறும் ஆய்வுக்கருத்துக்கள் /முடிவுகளுக்கு கட்டுரையாளரே பொறுப்பாவார்மேற்கோள்பாடல்களின் எண்ணையும்அடிகளையும் / பிறதுணை நின்ற நூல்களின் விவரபக்க  அடிக்குறிப்புகளையும்  அவசியம் ஆங்காங்கே குறிப்பிட வேண்டும்அவ்வாறு செய்யப்பெறாத பாடல்கள் / பகுதிகள் முழுவதுமாக நீக்கப்பெறும்

4.        ஆய்வுக்கட்டுரைகள் தாளில் இருவரி இடைவெளியுடன் ,750 முதல் 800 சொற்கள் அளவினதாய்,  பாமினி UNICODE எழுத்துருவில் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் கணினி வழி ஒளியச்சு செய்துமின்னஞ்சல் வழி / குறுவட்டு வடிவில் அனுப்பவேண்டும்முடிந்த அளவு பிறமொழிக் கலப்பற்றதாய் இருத்தல் வேண்டும்.கையெழுத்துப்படிகள் கண்டிப்பாய் ஏற்கப்பெறா.

முன்னுரிமைகளும் கட்டணங்களும்.  
 அந்தமானில் இக்கருத்தரங்கம் நடைபெறுவதால் மேலும் போக்குவரத்து செலவினம், தங்குமிடம், உணவு ஆகியன சலுகை நிலையில் வழங்கவும் கருத்தரங்கக் குழு ஆவன செய்து வருகிறது. எனவே இக்கருத்தரங்கில் வரையறுக்கப்பெற்ற எண்ணிக்கையில் மட்டுமே ஆய்வறிஞர்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. இதன் காரணமாகச் சில முன்னுரிமைகள் வழங்க முடிவும் செய்யப்பெற்றுள்ளது. அவை பின்வருமாறு.

கட்டணங்கள்

ஆய்வறிஞர், கட்டுரை பதிவுக்கட்டணம்
ரூ.1000 மட்டும்
தங்குமிடம், உணவு உட்பட மூன்று நாட்களுக்கு மட்டும்
போக்குவரவு செலவு (சலுகை நிலையில்)
போகவும் வரவும்
ரூ 12000 (தோராயமாக)
தங்கும் இடச்  செலவு
ரூ 1000
ஆக மொத்தம் ரூபாய் 14,000 (பதினான்காயிரம்)
உடன் வருபவர் ஒவ்வொருவருக்கும்
ரூ 15000 (பதினைந்தாயிரம்)
(போக வர- தங்குமிடம், மூன்று நாள் உணவு உட்பட)
அந்தாமானில் உள்ள பேராளர்கள் கட்டுரைக்கான பதிவுக்கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். கட்டுரை, மற்றும் தொகையினைக் காரைக்குடி முகவரிக்கு அனுப்புவது நலம்.
வெளிநாட்டுப் பேராளர் / ஆய்வாளர்களுக்குப் பதிவுக்கட்டணம் அமெரிக்க $ 60/= போக்குவரவுச் செலவு அவரவர் பொறுப்பில் அமைத்துக்கொள்ள வேண்டும். ஒருநாள் தங்குமிட வசதி ,உணவு ஏற்பாடு செய்யப்பெறும்.
ஆய்வாளர்கள் தங்கள் பொறுப்பில் கலந்து கொள்வதானலும் கலந்து கொள்ளலாம். அவர்கள் பதிவுக்கட்டணம் ரூ 1000 செலுத்தினால்  ஒருநாளுக்கான உணவு, வசதியும், கருத்தரங்கில் கட்டுரை வாசிக்கும் வாய்ப்பும் செய்துதரப்பெறும்.

முன்னுரிமைகள்
5.        கட்டுரையின் சுருக்கம், மற்றும் பதிவுக்கட்டணம், போக்குவரவுச் செலவுக்கட்டணம் ஆகியன இவ்வறிப்பு வெளியான பத்து நாட்களுக்குள் அனுப்பி வைப்பவர்களுக்கு  முன்னுரிமை வழங்கப்பெறும்..
          
6.        மேலும் கருத்தரங்கில் பங்கேற்க வருபவர் பெயர் (மிக முக்கியம் - அடையாள அட்டையில் உள்ளபடி), அவரின் தந்தையார் பெயர், இதற்கான புகைப்படம், வயது கொண்ட அடையாளச் சான்று (ஜெராக்ஸ்) ஆகியன அனுப்பப்பெற வேண்டும். மேலும் உடன் வருவோர்க்கு இதே நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

7.        மேலும் கம்பன் குறித்து நூல் எழுதியவர்களுக்கு (நூல் பிரதி ஆய்வுச் சுருக்கத்துடன் அனுப்பப்பெறவேண்டும்), காரைக்குடி கம்பன் தமிழாய்வு மையம் 2013ஈ 2014 ஆம் ஆண்டுகளில் நடத்திய இரு கருத்தரங்குகளில் கலந்து கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பெறும்.  இரு கருத்தரங்கத் தொகுதிகளில் கட்டுரையாளர் எழுதி இடம்பெற்றுள்ள கட்டுரையின்  வரிசை எண்ணைக் குறிப்பிடவேண்டும்.

மற்ற நெறிமுறைகள்
8.        ஆய்வுக்கட்டுரைகள் அறிஞர் குழுவின்  ஏற்பினைப் பெற்றுகம்பன் தமிழ் ஆய்வுக்கோவையாக நூல் வடிவில் ISBN எண்ணுடன் அச்சிடப்பெற்று கருத்தரங்கில் பேராளர் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரதி வழங்கப்பெறும்மேலும் அதிகப் பிரதிவேண்டுவோர் முன்கூட்டியே பதிவு செய்துகொண்டு அதற்குரிய தொகையினைச் செலுத்தின் பெறலாம்அந்தமான் வர இயலாதவர்கள் ரூ 100 சேர்த்து ரூ 1100 அனுப்பினால் கூரியர் வழி அனுப்பி வைக்கப்பெறும்.

9.         தனிஅறை வசதி வேண்டுவோர் அதற்கென தனித்த கட்டணம் செலுத்த வேண்டிவரும். (குறைந்தது நாள் ஒன்றுக்கு 2000 அளவில்)

10.     .கருத்தரங்கு குறித்த அழைப்புஅவசரச் செய்திகள்குறுஞ்செய்திகளாக கைபேசி / மின்னஞ்சல் வழியாக  மட்டுமே அனுப்பப்பெறும்.
11.     .தேர்ந்தெடுக்கப் பெறாத கட்டுரைப் பிரதிகள் எக்காரணங்கொண்டும் திருப்பி அனுப்பப்பெறா..
12.      கருத்தரங்கிற்கான கட்டணங்கள் காரைக்குடியில் மாற்றத்தக்க (Crossed Bank Demand Draft) குறுக்குக்கோடிட்ட வங்கிவரைவோலையாக “KAMBAN ACADEMY” என்றபெயருக்கு Registered Post / Speed Post / Courier Mail மூலமாக அனுப்பி உதவிட வேண்டுகிறோம்.
13.     பதிவுப் படிவமும்ஆய்வுக் கட்டுரைச்சுருக்கமும் கட்டணமும் 30-09-2015க்குள் காரைக்குடி அலுவலகத்திற்கு வந்தடைய வேண்டும்காலதாமதடமாக வரும் கட்டுரைகள் ஏற்கப்படாது.
14.     கட்டுரைத்தேர்வு முதலான அனைத்து நடைமுறைகளிலும் கருத்தரங்க கூட்டு நடவடிக்கைக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது.

கம்ப ராமாயண பன்னாட்டுக் கருத்தரங்கு  ” 2016
பதிவுப் படிவம்
1.      பெயர்தமிழில்

ஆங்கிலத்தில் (in CAPITAL Letters):

 2.      கல்வித்தகுதி:

3.      தற்போதையபணி:

4.      பணியிட  முழு  முகவரி:

5.      இல்லமுழுமுகவரி:

   அ.கு.எண்:
   மாவட்டப்பெயர்:
   தொலைபேசி ஊர்க் குறியீட்டு(S T D) எண்:            தொ.பேஎண்:          
   கைபேசி எண்:                                                 e-mail id  (மின்னஞ்சல்(கட்டாயம் சுட்டப்பெறவேண்டும்.)

அந்தமான் கருத்தரங்கில் நேரில் பங்கேற்க, தங்களின் பயணத்திட்டத்தில் இணைய -----  இயலும் / இயலாது.
உறுதிமொழி
.................................................ஆகிய  நான், ......................................................................................................... என்னும் தலைப்பில் படைக்கவுள்ள  ஆய்வுக்கட்டுரையையும் பேராளர் கட்டண வரைவோலையையும் இணைத்து அனுப்பியுள்ளேன்இக்கருத்தரங்க விதிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிப்பேன் என்றும் உறுதி அளிக்கின்றேன்.
6.      கட்டணத்தொகை:
வரைவோலை எடுத்த வங்கியின்பெயர்:              வரைவோலைஎண்:
 இடம்:
நாள்:                                                                                                                                     கையொப்பம்:

(படிவத்தினைப் படிகள் எடுத்தும் அனுப்பலாம்)

கருத்தரங்கத்திற்கான தொடர்பு முகவரி
Kamban Adisudi Pala Palaniappan, secretary, Kamban Academy, "Sayee" 1E, Chettinadu Towers, 5, Valluvar Salai, Subramaniyapuram North, Karaikudi 630002, Tamilnadu, India
மின்னஞ்சல்: kambantamilcentre@gmail.com    
தொலைபேசி தகவல் தொடர்பிற்கு
திரு கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் – 9445022137 (அதி முக்கியமான தகவல்களுக்கு மட்டும்)
முனைவர் இரா. குறிஞ்சி வேந்தன் – 9629662507 (வெளிநாட்டுப் பயண விவரங்கட்கு)
முனைவர் சொ. சேதுபதி-9443190440 (ஆய்வுக்கட்டுரை விபரங்கட்கு)
முனைவர் மு.பழனியப்பன் 9442913985 (பிற தகவல்களுக்கு)
அந்தமான் அன்பர்களின் தொடர்பிற்கு திரு. கிருட்டிண மூர்த்தி, 9434289673
மேலும் விபரங்கள் அறிய http://kambankazhagamkaraikudi.blogspot.in/ என்ற இணையப் பக்கத்தைக் காண்க.

முக்கியமான நாட்கள்
பதிவுக்கட்டணம், ஆய்வுக்கட்டுரை, அல்லது ஆய்வுச் சுருக்கம், பயணக்கட்டணம், உடன் வருவோர் பயணக்கட்டணம் மற்றும் அடையாளச் சான்று, பெயர், தந்தையார் பெயர்  ஆகியன அளிக்க முன்னுரிமை நாள் – 15- 09-2015
நிறைவு நாள் – 30-09-2015

No comments :

Post a Comment