Saturday, September 24, 2016

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் இசையரசி எம்.எஸ். சுப்புலஷ்மி நூற்றாண்டு விழா



அன்புடையீர்
வணக்கம்

கம்பன் புகழ் இசைத்துக் கன்னித் தமிழ் வளர்க்கும்
 கம்பன் கழக அக்டோபர் மாதத் திருவிழா 1.10.2016 ஆம் நாள் 
சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு ,
கிருஷ்ணா திருமண மண்டபத்தில் இசையரசி எம்.எஸ்.
 புகழிசை பரவு நூற்றாண்டு விழாவாக 
காரைக்குடி கம்பன் கழத்தால் கொண்டாடப் பெறுகின்றது.

இறைவணக்கம் - செல்வி கவிதா மணிகண்டன்

இசைத் தோரணவாயில்- 
திரு கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் 
அவர்கள்

இசைசேர்த் தலைமையும் எம்.எஸ். இசைத்த 
கம்பன் கவி அமுதம் குறுந்தகடு வெளியீடும்
திருவையாறு தமிழ்நாடுஅரசு இசைக் கல்லூரியின் 
மேனாள் முதல்வர் முனைவர் இராம. கௌசல்யா

இசைக்கோலம்
பத்ம பூஷண் சங்கீத கலாநிதி இசைப் பேரறிஞர் 
மதுரை ஸ்ரீ டி. என் சேஷகோபாலன்

நன்றியுரை பேரா. மு. பழனியப்பன்

சீர் இசை உண்டி




--------------------
2016 செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி நூற்றாண்டு விழா 
கண்ட இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் கம்பன் கழகத்திற்கு 
பெருங்கொடை அளித்ததோடு கம்பன் கவி அமுதம் என தனி 
இசை ஒலி நாடாவாகவும் வழங்கிப் பெருமை சேர்த்தமைக்கு 
நன்றி இசைக்கும் இனிய திருவிழா இது

கம்பன் புகழ்பாடிக் கன்னி இசைத் தமிழ் வளர்க்க
அன்பர்கள் யாவரும் வருக
அன்பும் பணிவும் இசைந்த
கம்பன் கழகத்தார்
நன்றி
கம்பன் தமிழமுதம் பருக வருகவென வரவேற்கும்
பொன்னமராவதி அன்னை மெடிக்கல்ஸ் 
அரு.வே மாணிக்கவேலு, 
சரசுவதி அறக்கட்டளை
நமது செட்டிநாடு இதழ்
நிகழ்ச்சி உதவி இசைந்தோர்
1.10.2016 அன்று 81 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 
நாளும் 16.10. 2016 ஆம் நாள் சதாபிஷேக விழாவும் இணைந்து 
இசைந்த புகழ் மெ.செ. ராம.மெய்யப்பச் செட்டியார் , அழகம்மைஆச்சி 
தம்பதியருக்குப் பல்லாண்டு, பல்லாண்டு இசைந்து மகிழ்கின்றோம்

கம்பன் கவி அமுத இசைக் குறுந்தகட்டினை விழா அரங்கில் 
சலுகை இசைந்த விலையில் அன்பர்கள் பெற்று இசை பருகி இன்புறலாம்.

Wednesday, August 24, 2016

செப்டம்பர்கம்பன் திருவிழா 2016

அன்புடையீர்
வணக்கம்
வழக்கம்போல இம்மாதக் கம்பன் திருவிழா செப்டம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைவரும் வருக. இதனுடன் அழைப்பிதழை இணைத்துள்ளோம
கம்பன் கழகம், காரைக்குடி
(புரவலர் திரு. எம்.ஏ.எம். ஆர். முத்தையா (எ) ஐயப்பன் செட்டிநாடு குழுமம்)
அன்புடையீர்
வணக்கம். கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் தாய்க் கம்பன் கழக செப்டம்பர் மாதக் கம்பன் திருவிழா கவியரங்கமாக 3-9-2016 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்குக் கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இறைவணக்கம் -
கீழப்பூங்குடி செல்வி கவிதா மணிகண்டன்
வரவேற்புரை –
முனைவர் மு.பழனியப்பன்
தோரணவாயில் -
கவிச்சக்கரவர்த்தி காப்பியக் கவிஞர் நா. மீனவன்
கவியரங்கம்
தலைவர்
கவிஞர் வீ.கே. கஸ்தூரி நாதன், குழிபிறை
தலைப்பு – கம்பன்
என் தோழன் -
கவிஞர் ஆர்.எம்.வி. கதிரேசன்
என் காதலன் -
கவிஞர் :ஆர். இராஜேந்திரன்
திருகோகர்ணம்
என் சற்குரு
கவிஞர் புத்திரசிகாமணி சேந்தன் குடி
என் தெய்வம் -
கவிஞர் கா. நாகப்பன், காரைக்குடி
சுவைஞர்கள் கவியுரையாடல்
நன்றியுரை திரு கம்பன் அடிசூடி
சிற்றுண்டி
கம்பன் புகழ் பருகிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக
நன்றி
கம்பன் தமிழமுது பருக வரவேற்கும் அரு. வே. மாணிக்கவேலு, சரசுவதி அறக்கட்டளை
அன்னை மெடிக்கல்ஸ், பொன்னமராவதி
செட்டிநாடு பரோபகார நிறுவனத்தின் சிகப்பி இல்லம்
பிள்ளையார்பட்டி குன்றக்குடி இரு தலங்களுக்கும் இடையில்
மூத்தோர் இல்லம் (9941817777)
நமது செட்டிநாடு இதழுக்குப் பல்லாண்டு


Monday, August 15, 2016

ஆடி மாத ஆன்மீக இலக்கிய நிகழ்ச்சி

காரைக்குடி கம்பன் கழகமும், கிருஷ்ணா கல்யாண மண்டபமும் இணைந்து, ஆடி மாத ஆன்மீக இலக்கிய நிகழ்ச்சியை ஒரு வாரம் நடத்தின. கடந்த ஆறாம் தேதி முதல் நடைபெற்ற இவ்விழாவில் முதல்நாள் (6.8.2016)  இராமனின் எவ்வண்ணம் செம்மை சேர் வண்ணம் எவ்வண்ணம் என்ற தலைப்பில் பட்டிமண்டபம் நடைபெற்றது. இதற்குப் பேராசிரியர் பாகை கண்ணதாசன் அவர்கள் தலைமையேற்றார். கைவண்ணம் என்ற அணியில் புவலர் பாரதிதாசன், முனைவர் பாரதி அழகப்பன் ஆகியோர் வாதிட்டனர். கால்வண்ணம் என்ற அணியில்  புலவர் அழ. பூபதி, கவிஞர் ஜோதி சுந்தரேசன் ஆகியோர் வாதிட்டனர். இதனைத் தொடர்ந்து 7.8.2016 அன்று சேக்கிழார் என்ற தலைப்பில் மதுரை, பேராசிரியர் யாழ்.சு சந்திரா அவர்கள் உரையாற்றினார். 8.8.2016 ஆம் நாளன்று, கவிஞர் பெர்னாட்ஷா சுந்தரர் என்ற தலைப்பில் பேசினார். 9,8,2016 அன்று பேராசிரியர் பழ. முத்தப்பன் அவர்கள் மாணிக்கவாசகர் பற்றிப் பேசினார். அன்று உறையூர் திருவாதவூரார் திருவாசக முற்றோதல் குழவினாரால் திருவாசகம் இசைக்கப்பெற்றது. 10.8.2016 அன்று கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள் ஞானசம்பந்தர் என்ற தலைப்பில் உரையாற்றினார். 11.8.2016 அன்று காசி-ஸ்ரீ அரு. சோமசுந்தரம் அவர்கள் திருநாவுக்கரசர் பற்றி உரை நிகழ்த்தினார். 12.8.2016 அன்று பேராசிரியர் செந்தமிழ்ப்பாவை அவர்கள் ஆண்டாள் பற்றி உரை நிகழ்த்தினார். நாள்தோறும் திருமுறை, நாலாயிரப் பாடல்களைவ செல்வி கவிதா, திருமதி வள்ளி பாலகிருஷ்ணன் ஆகியோர் இசைத்தனர்.



Friday, August 5, 2016

ஆடியில் ஒரு வாரம் இலக்கியம்


ஆடித்தள்ளுபடி துணிகளுக்கு உண்டு. ஆடியில் பிறர் மனம் கொள்ளும்படி ஒரு வாரம் இலக்கிய நிகழ்வுகளை நடத்தும் எண்ணம் காரைக்குடி கம்பன் கழகத்திற்கு ஏற்பட்டதன் விளைவு இது. அழைப்பினை ஏற்று அனைவரும் வருக. 




Friday, July 15, 2016

கம்பன் அடிப்பொடி சா. கணேசனாரின் 35 ஆவது புகழ்த்திருநாள்

கம்பன் கழகம்,
காரைக்குடி
69 ஆம் கூட்டம்
அன்புடையீர்
வணக்கம்.



கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும்
கம்பன் கழக நிறுவனர்
கம்பன் அடிப்பொடி சா. கணேசனாரின்
35 ஆவது புகழ்த்திருநாள்
28-7-2016 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 6.00மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு, கிருஷ்ணன் கோயிலை அடுத்துள்ள கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
நிகழ் நிரல்
இறை வணக்கம்:
செல்வி கீழப்பூங்குடி கவிதா மணிகண்டன்
வரவேற்புரை: முனைவர் மு.பழனியப்பன்
நிறுவனர் திருநாள்
நாதோபாசனை
பன்னிரு திருமுறை,
பஞ்சபுராணம்,
வேதமுழக்கம்
வேத முழக்கம்-
ஜிஎஸ்வி பைரவ குருக்கள்
பஜனை பக்திப் பாமாலை
திரு. எஸ். பி. முத்துக்குமரன் குழுவினர்
கம்பன் அடிப்பொடி சா.கணேசனாரின் குடும்பத்தாரைக் கௌரவித்தல்
அறிமுகம் திரு. கம்பன் அடிசூடி
திரு. ச. கண்ணன் , திருமதி உமையாள் கண்ணன்
திரு.ச. கம்பராமன், திருமதி அழகம்மை கம்பராமன்
திருமதி வாசுகி அண்ணாமலை, திரு. மெ. அண்ணாமலை
திருமதி கண்ணகி சாமிநாதன், திரு. சா.க. சாமிநாதன்
சிறப்புரை
பேராசிரியர் திருமதி சரசுவதி இராமநாதன்
சுவைஞர்கள் கலந்துரையாடல்
நன்றியுரை, பேரா. மா. சிதம்பரம்
சிற்றுண்டி
கம்பன் புகழ் பருகிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக
அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்
நன்றி
காளையார் மங்கலம்
திரு. சொ. ராம. கண்ணப்பன் பி.ஈ.
தலைமைப் பொறியாளர், பணிநிறைவு,
தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை
திருமதி மீனாட்சி ஆச்சி
தம்பதியருக்குப் பல்லாண்டு பல்லாண்டு
கம்பன் அடிப்பொடியின் மைத்தனர் மகன்
திரு.சா.லெ. ராம.ராம. மீ. சுப்பிரமணியன்
(புகைப்படக்கலைஞர் சுப்பு)
திருமதி சிவகாமி
தம்பதியருக்குப் பல்லாண்டு, பல்லாண்டு

Sunday, July 3, 2016

கம்பன் கழகத்தின் ஜூலை மாதத் திருவிழா.

ஏன் பொலிந்தது - முதல் சொற்பொழிவாளர் மாதுவின் பொலிவுரை.

ஏழாமாண்டுத் தொடக்கவிழாவும், டாக்டர் வானதி திரு.இராமநாதன் அவர்களுக்குப் பாராட்டுவிழாவும், அதை மணிமேகலைப் பிரசுரத்தின் திரு. ரவி தமிழ்வாணன் பாராட்டிய விழாவாகவும் முக்கனியாகச் சுவைத்தது காரைக்குடி கம்பன் கழகத்தின் ஜூலை மாதத் திருவிழா. 
வழமை போல் செல்வி கவிதாவின் தமிழமுதத்துடன் துவங்கியது விழா. 
பேராசிரியர் திரு. மு. பழனியப்பன் அவர்களின் இன்னுரையோடு களை கட்டியது. 
விழாவில் முதல் கூட்டத்தில் முதல் சொற்பொழிவாற்றிய  திரு. இரா. மாது அவர்களுக்கு பேராசிரியர் செந்தழிப் பாவை சிறப்புச் செய்தார்.  
மணிமேகலைப் பிரசுரத்தின் திரு. ரவி தமிழ்வாணன் அவர்களுக்கு கிருஷ்ணா கல்யாண மண்டபத்தின் உரிமையாளர் திரு. சேவுகன் செட்டியார் அவர்கள் சிறப்புச் செய்தார்கள்.
திருச்சிராப்பள்ளிக் கம்பன் கழகச் செயலாளர் திரு. இரா. மாது அவர்களின் சிறப்புரை.

மாது அவர்களின் தந்தையார் திரு இராதாகிருஷ்ணனும் கம்பனில் தோய்ந்தவர்கள். எனவே கம்பனிலேயே பிறந்து வளர்ந்திருக்கும் மாது அவர்களின் சொற்பொழிவு மிகச் செறிவாக இருந்ததில் வியப்பேதுமில்லை.



ஏன் பொலிந்தது என்ற தலைப்புக்கு ஏற்ப., கம்பராமாயணத்தில் இராமன் தனது மூன்று சகோதரர்களுடன் குகன், சுக்ரீவன், விபீடணன் ஆகியோரையும் தனது சகோதரர்களாக ஏற்ற தருணத்தில் தனது தந்தை தயரதனின் மைந்தர்களாகக் குறித்துச் சொல்லிய நேரத்தில் பொலிந்தது எனக் கொண்டுவந்து முடித்தது சிறப்பு.

இராமனின் வாழ்வை ஒட்டி லெக்ஷ்மணனின் வாழ்வும், பரதனின் வாழ்வை ஒட்டி சத்ருக்கனனின் வாழ்வும் எப்படி அமைந்தது என ஹோமத்தில் இருந்து எடுத்துக் கொடுக்கப்பட்ட பாயாசப் பங்கின் மூலம் தெளிவாக்கினார். அதே போல ராமரை என்றும் பிரியாமல் இருக்கும் லெக்ஷ்மணன் ( ஆதிசேஷன் ), சங்கின் அம்சமாக பரதன், சக்கரத்தின் அம்சமாக சத்ருக்கனன் ஆகியோரைப் பற்றியும் விரிவாகக் கூறியது சிறப்பு. 

எம்ஜியாரையும் சிவாஜியையும் நடிப்பில் ஒப்புமை சொல்லி இராமனின் உயர்வைப் பேசிய விதம் எதிர்பாராவிதமாக இருந்தாலும் அருமை. 

கம்பனடிசூடி அவர்களின் பேச்சு வழக்கம்போல் நினைவுக் கொத்து. பல மலரும் நினைவுகள். ஒவ்வொருவருடனும அவருக்கு இருக்கும் ஆத்மார்த்தமான தொடர்பு நெகிழ வைத்தது. பொது ஜனத் தொடர்பிலும் சரி, தனி நபர் தொடர்பிலும் சரி மிகப் பர்ஃபெக்டான ஒரு நிலைமையைக் கையாள்கிறார்கள்.அது அவர்களின் இயல்பென்றே சிறப்பித்துச் சொல்லலாம். அவர்களுக்கு அங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்ல எவ்வளவு நல்நினைவுகள் மேலெழுந்தனவோ அதை விட அதிகமாக அங்கே பேசியவர்களுக்கும் இருந்தவர்களுக்கும் கம்பனடிசூடி அவர்களைப் பற்றிய நல்நினைவுகள் மேலோங்கிக் கொண்டிருந்தன.

வானதி திரு. திருநாவுக்கரசு அவர்களைப் பற்றியும் மணிமேகலைப் பிரசுரத்தின் திரு லேனா, திரு ரவி தமிழ்வாணன் பற்றியும் , சிறப்புப் பேச்சாளர் மாது மற்றும் அவர்தம் தந்தை பற்றியும் நினைவலைகளைப் பகிர்ந்து திரு கம்பனடிசூடி அவர்கள் சிறப்பித்துச் சொன்னார்கள். 

தன்னைச் சார்ந்தவர்களை மட்டுமல்ல தனக்கு லேசாக அறிமுகமானவர்களாக இருந்தால் கூட அவர்களையும் - சிறு தகுதி உடையவர்களாக இருந்தாலும் கூட - சிறப்பித்து முன்னிலைப் படுத்தி அவர்களின் திறமைகளுக்குத் தூண்டுகோலாகவும் ஊக்குவிப்பவராகவும் இருந்து ஒளிவிடச் செய்பவர்கள் கம்பனடிசூடி என்பதை அங்கே இருந்தவர்களும், குறிப்பாக சிறப்பாக ரவி தமிழ்வாணன் அவர்களும் பதிவு செய்தார்கள். அதையே என் மனமும் ஆமோதித்துக் கொண்டிருந்தது. 
டாக்டர் பட்டம் பெற்றமைக்காக கம்பராமாயணம் பற்றி நூற்றுக்கணக்கில் அதிக நூல் வெளியிட்ட பெருமைக்குரிய வானதி பதிப்பக பதிப்புத் திலகம் திரு வானதி இராமநாதன் அவர்களுக்கு தேவகோட்டை ஜமீன்தார் திரு. சோம. நாராயணன் செட்டியார் அவர்கள் அங்கவஸ்த்திரம் அணிவித்து வாழ்த்திக் கௌரவித்தார்கள். 
அவர்களுக்கு முடிசூட்டுவிக்கப்பட்டது. கொப்புடை அம்மன் கோயிலில் அர்ச்சனை செய்து பிரசாதமும் அளிக்கப்பட்டது. 
வாழ்த்து மடல் வாசித்தளிக்கப்பட்டது. 
திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் உரையாற்றினார்கள்.

சக பதிப்பாளர் என்றபோதும் போட்டியாளராகக் கருதாமல் சகோதரர்போல் வாஞ்சையுடன் வானதி ராமனாதன் அவர்களை வாழ்த்திப் பேசினார் ரவி தமிழ்வாணன்.

தந்தையர் காலத்திலிருந்தே இரு குடும்பத்தாருக்கும் உள்ள நல்லிணக்கம் பற்றிப் பேசியதோடல்லாமல் வானதி ராமனாதனின் வெற்றிக்குப் பின்னணியில் இருக்கும் அவரது மனைவி உண்ணாமலை ஆச்சி பற்றியும் பாராட்டினார். அதே போல் மறைந்த வானதி சோமு பற்றியும் அவர் பொதுஜனத் தொடர்பில் சிறந்ததை சிலாகித்துக் கூறினார்.  அதேபோல் கம்பனடி சூடி அவர்களின் தனித்தன்மைகளையும் சிறப்பித்துச் சொன்னார். 

ஒரு சொற்பொழிவு எவ்வளவு தெளிவாகவும் சிறப்பாகவும் கலகலப்பாகவும் கூட்டத்தினரை கட்டுக்குள் வைக்கும்படியும் இருக்கவேண்டும் என்பதை அவரைப் பார்த்துக் கற்றுக் கொண்டிருந்தேன் நான் :) 
இன்னொன்று குறிப்பிட வேண்டும். தன் மணிமேகலைப் பிரசுரம் சார்பாகவும் மாலையும் அங்கவஸ்த்ரமும் போர்த்தி வானதி ராமனாதன் அவர்களை ரவி தமிழ்வாணன் அவர்கள் சிறப்புச் செய்தார்கள். ரவி அவர்களின் நண்பர் திரு காளி முத்து பூமாலை அணிவித்தார்.
ஒரு மகிழ்ச்சியான தருணம். 
தேவகோட்டையைச் சேர்ந்த இன்னொரு நகரத்தார் பிரமுகர் வானதி இராமனாதன் அவர்களுக்கு ரவியின் சார்பில் பொன்னாடை போர்த்தினார்கள். 
அகமும் முகமும் மலர அனைவரையும் அரவணைத்திருக்கும் கம்பனடி சூடி அவர்களும் ரவி தமிழ்வாணன் அவர்களும் மனிதருள் மாணிக்கங்கள். 
மிகப் பெரும் சர்ப்ரைஸாக ரவி தமிழ்வாணன் அவர்கள் கம்பனடி சூடி அவர்களுக்கும் இன்னொரு பிரமுகர் மூலம் பொன்னாடை போர்த்திச் சிறப்புச் செய்தார்கள்.
கம்பர் விழாவில் சுவைஞர்கள் உரையாடல் தொடர்ந்தது. வீட்டில் வைபவம் காரணமாக நான் எட்டு மணிக்கே கிளம்ப நேர்ந்தது.

கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம். வாழ்க வளமுடன். ! 



thanks to http://honeylaksh.blogspot.in/2016/07/blog-post_3.html?fb_ref=Default

Wednesday, June 22, 2016

காரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின் ஏழாம் ஆண்டு தொடக்கவிழா 2.7.2016

கம்பன் கழகம் காரைக்குடி, 
அன்புடையீர் 
வணக்கம். கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின் ஏழாம் ஆண்டு தொடக்கவிழா 2.7.2016 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.
6.00மணி - இறைவணக்கம்
6.05. வரவேற்புரை- பேராசிரியர் மு.பழனியப்பன்
6.10 என் பொலிந்தது-
முதல் கூட்டத்தில் முதல் பொழிவாற்றிய
திரு. . இரா. மாது,
திருச்சிராப்பள்ளி 
கம்பன் கழகச் செயலாளர்.
6.50 பாராட்டு அறிமுகம்: திரு. கம்பன் அடிசூடி
6.55 - கம்பராமாயணம் பற்றி நூற்றுக் கணக்கில் அதிக நூல்களை வெளியிட்ட பெருமைக்குரிய வானதி பதிப்பக ~பதிப்புத்திலகம்| திரு வானதி இராமநாதன் அவர்களுக்கு டாக்டர் பட்டம் பெற்றமைக்காகப் பாராட்டு
மணிமேகலைப் பிரசுர திரு. ரவி. தமிழ்வாணன்
திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்தப் பேராசிரியர்; திரு சபா. அருணாசலம்
வாழ்த்திக் கௌரவித்த்ல்:
தேவகோட்டை ஜமீன்தார் 
திரு. சோம. நாராயணன் செட்டியார்
7.40 ஏற்புரை – டாக்டர் வானதி இராமநாதன்
7.45 – சுவைஞர்கள் கலந்துரையாடல்
8.00 நன்றி
8.05 சிற்றுண்டி
கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க 
அன்பர்கள் யாவரும் வருக
அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்
நிகழ்ச்சி உதவி

நமது செட்டிநாடு மாத இதழ்