Friday, March 11, 2016

கம்பன் திருவிழா 2016 அழைப்பிதழ் - வல்லமையில் வெளியிடப்பெற்ற பகுதி

காரைக்குடி – 2016 ஆம் ஆண்டு கம்பன் திருவிழா

காரைக்குடி கம்பன் கழகத்தின் 2016 ஆம் ஆண்டு கம்பன் திருவிழா

காரைக்குடி, கல்லுக்கட்டி கிருஷ்ணா திருமண மண்டபத்தில்
வரும் 21.3.2016 முதல் 23.3.2016 வரை நடை பெற உள்ளது.
24.03.2016 அன்று கம்பன் அருட்கோயில் (கம்பர் சமாதி)
உள்ள ஊரான நாட்டரசன் கோட்டையில் நடைபெற உள்ளது.
அனைவரும் வருக. அழைப்பிதழ் விபரம் பின்வருமாறு
காரைக்குடி கம்பன் கழக நிகழ்ச்சி நிரல் (2016)
____________________________________
21.3.2016 
திங்கட்கிழமை மாலை 5.00 மணி திருவிழா மங்கலம்
____________________________________
தலைவர்- தமிழக அரசு அறிவியல் நகரத் துணைத்தலைவர்
திரு. உ. சகாயம் . இ. ஆ.ப. அவர்கள்
இறைவணக்கம்- திருமதி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி,
மலர் வணக்கம் – திருமதி ராதா ஜானகிராமன்
கம்பன் அடிப்பொடி அஞ்சலி – செல்வி எம். கவிதா
கம்பன் அருட்கவி ஐந்து- திருச்சிராப்பள்ளி கலைக்காவிரி நுண்கலைக்
கல்லூரி மாணவ மாணவியர்
வரவேற்புரை- திரு கம்பன் அடிசூடி
தொடக்கவுரை- பேராசிரியர் தி, மு. அப்துல் காதர்
இசைத்தமிழறிஞர் திரு அரிமளம் சு. பத்மநாபன் எழுதி உமா பதிப்பகம் வெளியிடும் மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளைச் சொற்பொழிவு நூல் கம்பனில் இசைத் தமிழ் வெளியீடு
மதுரை தியாகராசர் கல்லூரி செயலர் திரு. ஹரி தியாகராஜன்
பொன்விழா கொண்டாடிய புதுச் சேரி கம்பன் கழகத்தின் செயலாளர் திரு. வி.பி சிவக்கொழுந்து அவர்களுக்குக் கம்ப வள்ளல் விருது வழங்கிப் பாராட்டு
மதுரை கம்பன் கழகத் துணைத்தலைவர் திரு சங்கர சீதாராமன்
கோவை கம்பன் கழகத் துணைச் செயலாளர் பேராசிரியர் க. முருகேசன் எழுதிய தெய்வமும் மகனும் நூல் வெளியீடு
பேராசிரியர் சொ. சேதுபதி எழுதிய கரைக்குடியில் ஜீவா என்ற நூல் வெளியீடு
சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் திரு. த. இராமலிங்கம்
அந்தமான் தீவில் கம்பன் கழகம் 2016 ஏப்ரலில் கூட்டும் மூன்றாம் உலகத் தமிழ்க்கருத்தரங்கச் செய்தி விழா மடல் வெளியீடு – செட்டிநாடு சிமெண்ட்ஸ் இயக்குநர், நமது செட்டிநாடு இதழ் புரவலர் திரு இராஜாமணி முத்துக்கணேசன்
கோவிலூர் ஆதீன கர்த்தர் திருப்பெருந்திரு மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகளுக்கு அவர்தம் கல்விப் பணிகளைப் பாராட்டி கம்பன் கழகம் பணிவுடன் அளிக்கும் காரைக்குடி தெ. இலக்குவன் நினைவைப் போற்றி அவர்தம் குடும்பத்தார் இவ்வாண்டு நிறுவியுள்ள கம்பன் அடிப்பொடி விருதினை வழங்கிப் பாராட்டு – மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம்
மாணாக்கர்களுக்கான பரிசளிப்பு- திருமதி வள்ளி முத்தையா
தலைமை உரை- திரு. உ. சகாயம் இ. ஆ. ப. அவர்கள்
____________________________________
22.3.2016 
செவ்வாய்க் கிழமை மாலை 5.00 மணி பூர நாள் நிகழ்ச்சி
____________________________________
தமிழமுதம் – செல்வி எம். கவிதா (தக்க பின்னியங்களுடன் )
கருத்துப்பொழிவு
கம்பனில் மறக்க முடியாதது – திரு. த. இராமலிங்கம்
கம்பனில் மறக்கக் கூடாதது -திரு. பழ. கருப்பையா
கவிப்பொழிவு
பொருள் – தமிழ் வெள்ளம்
தொடக்கப்பொழிவு – நாடாளுமன்ற உறுப்பினர் தகைமிகு கனிமொழி
சொற்கடல் – கவிதாயினி திருமதி ருக்மணி பன்னீர் செல்வம்
சுவை ஊற்று – கவிதாயினி திருமதி சல்மா
____________________________________
23.3.2016 
புதன் கிழமை மாலை 5.00 மணி உத்தரநாள்
____________________________________
தமிழமுதம்- செல்வி எம். கவிதா
பட்டிமண்டபம்
நடுவர்- திரு தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன்.
தலைப்பு – எவர் சந்திப்பில் கம்பன் பெரிதும் வெற்றி கொண்டு
வெளிப்படுகின்றார்?
இராமன் -கைகேயி- திரு. வே. சங்கர நாராயணன்
திருமதி பாரதி பாபு
திரு பாகை கண்ணதாசன்
இராமன் – இராவணன் திரு இரா. மாது
திரு. சுமதிஸ்ரீ
திரு. மெ. ஜெயம்கொண்டான்
இராமன்- சிறைமீண்ட சீதை
திரு. பழ. முத்தப்பன்
திருமதி இரா. கீதா
திரு அப்பச்சி எஸ் சபாபதி
நோக்கர் பெருமகள் நாற்பத்து ஒன்பதின்மர் வாக்களித்து ஒரு அணியை விலக்குதல்
நோக்கர்கள் தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர் மேல் முறையீடு
நோக்கர்கள் சார்பில் எதிர் வாதம் – திரு. மா. சிதம்பரம்
நடுவர் தீர்ப்பு
____________________________________
24.3.2016 
வியாழக்கிழமை மாலை 5.00 மணி நாட்டரசன் கோட்டை
____________________________________
தலைவர்
நாடாளுமன்ற உறுப்பினர் தகைமிகு டாக்டர் ஈ. எம். சுதர்சன் நாச்சியப்பன்
கம்பன் அருட்கோயில் வழிபாடு
மலர் வணக்கம் திருமதி லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி
திருமதி ராதா ஜானகிராமன்
கம்பன் அருட்கவி ஐந்து – திருச்சி கலைக்காவிரிக் குழுவினர்
இறைவணக்கம் – செல்வி எம்.கவிதா
வரவேற்புரை – திரு. கண. சுந்தர் உரை
கம்பன் கலை நகைச்சுவை – முனைவர் இளசை சுந்தரம்
நன்றியுரை – முனைவர் மு.பழனியப்பன்
வாழிய செந்தமிழ்
அனைவரும் வருக. அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வருக.
____________________________________
இவ்வாண்டு நிகழ்ச்சி உதவி
____________________________________
நமது செட்டிநாடு – இதழ்
கோட்டையூர் வள்ளல் அழகப்பர் குடும்ப திருமதி வள்ளி முத்தையா
பொன்னமராவதி அன்னை மெடிக்கல்ஸ்
திரு.அரு. வே. மாணிக்கவேலு, சரஸ்வதி அறக்கட்டளை
நாட்டரசன் கோட்டை திருமதி விசாலாட்சி கண்ணப்பன்
சிங்கப்பூர் தமிழ் அன்பர்
காரைக்குடி தெ. இலக்குவன் நினைவாக இல தெய்வராயன் காந்தி
திரு. கண. சரவணன், ஸ்ரீலெட்சுமி பிரிண்டர்ஸ், காரைக்குடி
விஸ்வாஸ் கலை பண்பாட்டு அறக்கட்டளை மதுரை
ஸ்ரீ விசாலம் சிட் பண்டு
மாணாக்கர்களுக்கான பரிசு
பேராசிரியர் தி. இராச கோபாலன் நிறுவியுள்ள வேம்பு அம்மாள் பரிசு
பேராசிரியர் சரசுவதி இராமநாதன் நிறுவியுள்ள புலவர் க.வே. இராமநாதனார் பரிசு
பேராசிரியர் மு.பழனியப்பன் நிறுவியுள்ள பழ. முத்தப்பனார் பரிசு
பொன்னமராவதி அரு,வெ . மாணிக்கவேலு சரசுவதி பரிசு
திருமதி லெ. அலமேலு நிறுவியுள்ள அரியக்குடி ஆர். எம். வேங்கடாசலம் பரிசு
____________________________________
1
2
3
4
5
6
7
8
____________________________________

Thursday, March 10, 2016

காரைக்குடி கம்பன் திருவிழா 2016

காரைக்குடி கம்பன் திருவிழா 2016

காரைக்குடி கம்பன் கழகத்தின் 2016 ஆம் ஆண்டு கம்பன் திருவிழா காரைக்குடி,
கல்லுக்கட்டி கிருஷ்ணா திருமண மண்டபத்தில்  வரும் 21.3.2016 முதல் 23.3.2016
வரை நடை பெற உள்ளது. 24.03.2016 அன்று கம்பன் அருட்கோயில் (கம்பர் சமாதி)
உள்ள ஊரான நாட்டரசன் கோட்டையில் நடைபெற உள்ளது. அனைவரும் வருக.
அழைப்பிதழ் விபரம் பின்வருமாறு
                  காரைக்குடி கம்பன் கழக நிகழ்ச்சி நிரல் (2016)

21.3.2016 திங்கட்கிழமை   மாலை 5.00 மணி           திருவிழா மங்கலம் 

   தலைவர்- தமிழக அரசு அறிவியல் நகரத் துணைத்தலைவர்
                         திரு. உ. சகாயம் . இ. ஆ.ப. அவர்கள்

இறைவணக்கம்- திருமதி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி,
 மலர் வணக்கம்  - திருமதி ராதா ஜானகிராமன்

கம்பன் அடிப்பொடி அஞ்சலி - செல்வி எம். கவிதா
கம்பன் அருட்கவி ஐந்து- திருச்சிராப்பள்ளி கலைக்காவிரி நுண்கலைக்
                                                    கல்லூரி மாணவ மாணவியர்

வரவேற்புரை- திரு கம்பன் அடிசூடி

தொடக்கவுரை- பேராசிரியர் தி, மு. அப்துல் காதர்

இசைத்தமிழறிஞர் திரு அரிமளம் சு. பத்மநாபன் எழுதி உமா பதிப்பகம் வெளியிடும்
மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளைச் சொற்பொழிவு நூல் கம்பனில் இசைத் தமிழ் வெளியீடு -
                          மதுரை தியாகராசர் கல்லூரி செயலர் திரு. ஹரி தியாகராஜன்

பொன்விழா கொண்டாடிய புதுச் சேரி கம்பன் கழகத்தின் செயலாளர்
திரு. வி.பி சிவக்கொழுந்து அவர்களுக்கு கம்ப வள்ளல் விருதி வழங்கிப் பாராட்டு
                        மதுரை கம்பன் கழகத் துணைத்தலைவர் திரு சங்கர சீதாராமன் 

கோவை கம்பன் கழகத் துணைச் செயலாளர் பேராசிரியர் க. முருகேசன் எழுதிய
தெய்வமும் மகனும் நூல் வெளியீடு  -
பேராசிரியர் சொ. சேதுபதி எழுதிய கரைக்குடியில்  ஜீவா என்ற நூல் வெளியீடு

 சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் திரு. த. இராமலிங்கம்

அந்தமான் தீவில் கம்பன் கழகம் 2016 ஏப்ரலில் கூட்டும் மூன்றாம்
உலகத் தமிழ்க்கருத்தரங்கச் செய்தி விழா மடல் வெளியீடு  -
செட்டிநாடு சிமெண்ட்ஸ் இயக்குநர், நமது செட்டிநாடு இதழ் புரவலர்
திரு இராஜாமணி முத்துக்கணேசன்

கோவிலூர் ஆதீன கர்த்தர் திருப்பெருந்திரு மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகளுக்கு 
அவர்தம் கல்விப் பணிகளைப் பாராட்டி கம்பன் கழகம் பணிவுடன் அளிக்கும் காரைக்குடி 
தெ. இலக்குவன் நினைவைப் போற்றி அவர்தம் குடும்பத்தார் இவ்வாண்டு நிறுவியுள்ள
கம்பன் அடிப்பொடி விருதினை வழங்கிப் பாராட்டு - மனிதத் தேனீ  இரா. சொக்கலிங்கம் 

மாணக்கர்களுக்கான பரிசளிப்பு- திருமதி வள்ளி முத்தையா

தலைமை உரை- திரு. உ. சகாயம் இ. ஆ. ப. அவர்கள் 

--------------------------------------------------------------------------------------------------------------------------


22.3.2016 செவ்வாய்க் கிழமை   மாலை 5.00 மணி           பூர நாள் நிகழ்ச்சி
தமிழமுதம் - செல்வி எம். கவிதா (தக்க பின்னியங்களுடன் )

                                                            கருத்துப்பொழிவு                                                              


கம்பனில் மறக்க முடியாதது - திரு. த. இராமலிங்கம்
கம்பனில் மறக்கக் கூடாதது -திரு. பழ. கருப்பையா


                                                                     கவிப்பொழிவு                                                           

                                        பொருள் - தமிழ் வெள்ளம்

தொடக்கப்பொழிவு - நாடாளுமன்ற உறுப்பினர் தகைமிகு  கனிமொழி
சொற்கடல் - கவிதாயினி திருமதி ருக்மணி பன்னீர் செல்வம்
சுவை ஊற்று - கவிதாயினி திருமதி சல்மா

--------------------------------------------------------------------------------------------------------------------------


23.3.2016 புதன் கிழமை   மாலை 5.00 மணி           உத்தரநாள்
தமிழமுதம்- செல்வி எம். கவிதா

                                               பட்டிமண்டபம்

நடுவர்- திரு தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன். 

                தலைப்பு - எவர் சந்திப்பில் கம்பன் பெரிதும் வெற்றி கொண்டு
                                       வெளிப்படுகின்றார்?

இராமன் -கைகேயி-                திரு. வே. சங்கர நாராயணன்
                                                           திருமதி பாரதி பாபு 
                                                            திரு பாகை கண்ணதாசன்

இராமன் - இராவணன்            திரு இரா. மாது
                                                              திரு. சுமதிஸ்ரீ
                                                               திரு. மெ. ஜெயம்கொண்டான்
இராமன்- சிறைமீண்ட சீதை  திரு. பழ. முத்தப்பன்
                                                                திருமதி இரா. கீதா
                                                                திரு அப்பச்சி எஸ் சபாபதி


நோக்கர் பெருமகள்ள நாற்பத்து ஒன்பதின்மர் வாக்களித்து ஒரு அணியை விலக்குதல்

நோக்கர்கள் தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர் மேல் முறையீடு
நோக்கர்கள் சார்பில் எதிர் வாதம் - திரு. மா. சிதம்பரம்
நடுவர் தீர்ப்பு
  24.3.2016 வியாழக்கிழமை  மாலை 5.00 மணி          நாட்டரசன் கோட்டை
தலைவர்  
நாடாளுமன்ற உறுப்பினர் தகைமிகு டாக்டர் ஈ. எம். சுதர்சன் நாச்சியப்பன்

கம்பன் அருட்கோயில் வழிபாடு

மலர் வணக்கம்   திருமதி லெட்சமி கிருஷ்ணமூர்த்தி
                                        திருமதி ராதா ஜானகிராமன்

கம்பன் அருட்கவி ஐந்து - திருச்சி கலைக்காவிரிக் குழுவினர்

இறைவணக்கம் - செல்வி எம்.கவிதா

வரவேற்புரை - திரு. கண. சுந்தர் 

தலைவர் உரை

கம்பன் கலை நகைச்சுவை  - முனைவர் இளசை சுந்தரம்

நன்றியுரை - முனைவர் மு.பழனியப்பன்

வாழிய செந்தமிழ்  

அனைவரும் வருக.   அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வருக. 

----------------------------------------------------------

இவ்வாண்டு நிகழ்ச்சி உதவி

நமது செட்டிநாடு - இதழ்
கோட்டையூர் வள்ளல் அழகப்பர் குடும்ப திருமதி வள்ளி முத்தையா
பொன்னமராவதி அன்னை மெடிக்கல்ஸ்
திரு.அரு. வே. மாணிக்கவேலு, சரஸ்வதி அறக்கட்டளை
நாட்டரசன் கோட்டை திருமதி விசாலாட்சி கண்ணப்பன்
சிங்கப்பூர் தமிழ் அன்பர்
காரைக்குடி தெ. இலக்குவன் நினைவாக இல தெய்வராயன் காந்தி
திரு. கண. சரவணன், ஸ்ரீலெட்சுமி பிரிண்டர்ஸ், காரைக்குடி
விஸ்வாஸ் கலை பண்பாட்டு அறக்கட்டளை மதுரை
 ஸ்ரீ விசாலம் சிட் பண்டு

மாணக்கர்களுக்கான பரிசு
பேராசிரியர் தி. இராச கோபலன் நிறுவியுள்ள வேம்பு அம்மாள் பரிசு
பேராசிரியர் சரசுவதி இராமநாதன் நிறுவியுள்ள புலவர் க.வே. இராமநாதனார் பரிசு
பேராசிரியர் மு.பழனியப்பன் நிறுவியுள்ள பழ. முத்தப்பனார் பரிசு
பொன்னமராவதி அரு,வெ . மாணிக்கவேலு சரசுவதி பரிசு
திருமதி லெ. அலமேலு நிறுவியுள்ள அரியக்குடி ஆர். எம். வெங்கடாசலம் பரிசு 











Sunday, March 6, 2016

கம்பன் நின்று நிலைப்பது அழகியல் பாடல்களிலா, அறவியல் பாடல்களிலா .



”ராமன் நான்கு கொலைகள் செய்திருக்கிறான். ஆனால் ராவணன் உயிர்க்கொலை செய்ததே இல்லை. “ என்று கம்பராமாயணப் பேச்சின் ஊடே ஒரு எதிர்பாரா செய்தியை கம்பனின் கோட்டையான காரைக்குடியில் கம்பன் கழகத்தில் நடைபெற்ற இசைப் பட்டிமண்டபத்தில் வழங்கிவிட்டுத் தப்பிச் சென்றிருக்கிறார் நண்பர் வளரும் கவிதை முத்து நிலவன் அவர்கள். !!!



விஷயம் இதுதான். மார்ச் மாத கம்பர் விழா - 5- 3- 2016. அன்று காரைக்குடி கிருஷ்ணா மண்டபத்தில் நடைபெற்றது. அதில் நண்பர் பதிவர் புதுக்கோட்டை முத்துநிலவன் தலைமையில் நடைபெற்ற இசைப் பட்டிமண்டபத்தில் கம்பன் நின்று நிலைப்பது அழகியல் பாடல்களிலே என்று மகா சுந்தர் அவர்களும், அறவியல் பாடல்களிலே என்று முனைவர் மு.பாலசுப்ரமணியன் அவர்களும் வாதாடினார்கள்.




மிக சுவாரசியமான இவ்விழாவுக்கு மகா சுந்தர் பேசி முடிக்கும்போதுதான் செல்ல இயன்றது. அடுத்து முத்துநிலவன் அவர்கள் செறிவார்ந்த உரையையும் மு பாலசுப்ரமணியன் அவர்களின் உரையையும் , கம்பன் அடி சூடி அவர்களின் நெகிழந்த உரையையும் கேட்கும் பாக்கியம் பெற்றேன். 




முனைவர் பாலசுப்ரமணியன், அறவியல் என்று சகோதரத்துவம், ( நானிலம் சார்ந்த சகோதரர்கள் - குகன், சுக்ரீவன், வீபீடணன், ) பற்றியும், சீதையின் கற்பின் அறம் பற்றியும் கூறினார். இராமனின் கற்பின் பெருமை பற்றியும் “ இரு மாதரைச் சிந்தையாலும் தீண்டேன் ” என்ற எண்ணம் பற்றியும் கூறினார். அழகியல் மட்டுமல்ல அனைத்தையும் பாடியிருக்கும் கம்பனின் அறத்தைப் புகழ்ந்தார். 




முத்துநிலவன் பேச்சு மிக அருமையாக இருந்தது.  மனைவியைக் கவர்ந்து சென்ற எதிரிக்கும் இரங்கும் மனநிலையில் இராமன் இராவணனிடம் , இன்று போய் நாளை வா என்று உரைத்த அறத்தையும், தசரதனிடம் கைகேயியும் பரதனும் அடுத்த ஜென்மத்திலும் தாயும் தனயனுமாகக் கிடைக்கும் பாக்கியம் அருளும் வரம் வேண்டிய இராமனின் அறம் பற்றியும் சிலாகித்துக் கூறினார். 


மேலும் கம்பனின் சொல்சித்திரத்தைப் புகழ்ந்து அவர் வார்த்தைகளை அடுக்கும் வித்தை பற்றிச் சிறப்பித்துக் கூறினார். நான் ரசித்த இடம் இதுதான். 


சீதையைப் பார்த்துத் திரும்பியதும் இராமனிடம் கண்டேன் கற்பின் கனலியைக் கண்களால். என்று கூறிய இடத்தில் கம்பன் வார்த்தைகளை அடுக்கிய விதத்தைச் சிறப்பித்துப் பொருள் கூறினார். ஒருவரைத் தேடிச் சென்று திரும்பும்போது முதலில் கேட்கப்படும் கேள்வி பார்த்தியா. பார்த்தேன். யாரைப் பார்த்தான் கற்பின் கனலியைப் பார்த்தேன். (கற்பின் கனலி என்றால் அது சீதை மட்டுமே. ). நீ பார்த்தியா இல்ல வேற யாரும் பார்த்தாங்களா. - கண்களால். எனது கண்களால் பார்த்தேன். என்று அவர் கூறியபோது மிக அருமையாக இருந்தது. 


மக்களை உயிராகவும் மன்னனை உடலாகவும் , உடல் மாறலாம் உயிர் மாறாது என்றும் மக்களுக்காகவே அரசாண்ட இராமனின் அறம் பற்றியும் சிறப்பித்துச் சொன்னார்.  


அழகியல் இருந்தாலும் அறவியல் சார்ந்தே தீர்ப்பளித்தார் நடுவர். அப்போதுதான் வான்மீகியில் இல்லாததைக் கம்பன் எப்படி மாற்றி அமைத்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டார். அங்கே இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றதையும் தமிழகத்துக்கு ஏற்றமாதிரி கம்பராமாயணத்தில் அப்படியே பூமியோடு பேர்த்துச் சென்றதையும் குறிப்பிட்டார். அப்போதுதான் இராமன் கொலை செய்தான் என்றும் இராவணன் கொலை செய்ததே இல்லை என்றும் குறிப்பிட்டார். இராவணனின் ராஜ்ஜியத்திலும் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்றும். அறம் பற்றிய மதிப்பீடு வரும்போது மட்டுமே இராமன் ஏகபத்தினி விரதனாக இருந்ததையும் அதே சமயம் எவ்வளவோ பெருமைகள் இருந்தும் பிறன்மனை நோக்கியதால் சீர்கெட்டழிந்த இராவணனின் நிலை பற்றியும் செம்மையாக மனதில் பதியும் வண்ணம் உரைத்தார். 


சிலர் கவிதைகள் எழுதுவார்கள். சில கவிஞர்கள் தங்கள் எழுத்துக்களால் இன்னும் சில கவிஞர்களை உருவாக்குவார்கள். ஆனால் மகா கவிஞனோ காலத்தை எழுதுவான் அப்படிப்பட்ட கவிஞர்களுள் ஒருவர் கம்பர். ( ஏனையோர் வள்ளுவன், பாரதி  எனக் குறிப்பிட்டார் ).  இன்றைக்கும் காலம் கடந்தும் வாசிக்கப்படும் நேசிக்கப்படும் ஒன்றாக கம்பரசம் இருப்பதைக் குறிப்பிட்டார். 


அறவியல் பற்றிய தனது தீர்ப்பே இறுதியானது அல்ல என்றும் இன்னும் இதுபற்றிய விவாதங்களை முன்னெடுக்கலாம் என்றும் குறிப்பிட்டது அவரது முதிர்ச்சியையும் எதிர்க்கருத்துக்களை எதிர்கொள்ளும் பெருந்தன்மையையும் காட்டியது.   


கம்பன் கழகம் சார்பாக போட்டிகள் நடத்தப் பெற்று மாணாக்கருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. 



கம்பனடிசூடி பழ பழ அவர்களின் உரை நெகிழ்வாக இருந்தது. ஏப்ரல் மாதம் அந்தமானில் கம்பன் கழகம் சார்பாக நடைபெறப்போகும் மூன்றாம் உலகத் தமிழ்க் கருத்தரங்கம் பற்றிக் கூறினார். அங்கே கம்பராமாயணத்தில் வெவ்வேறு தலைப்புகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றன.


காரைக்குடியில் வரும் மார்ச் 21, 22, 23, ஆகிய தேதிகளில் கம்பர் விழா நடைபெறப் போவது குறித்துக் கூறினார்கள். அதில் சிறப்பம்சங்களாக கோயிலூர் ஆதீனகர்த்தா திருப்பெருந்திரு. மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகளுக்கு அவர்தம் தமிழ், ஆன்மீகம், கல்விப் பணிகளைப் பாராட்டி தெ இலக்குவன் இல்லத்தார் நிறுவி இவ்வருடம் வழங்க உள்ள கம்பனடிப்பொடி விருது பற்றிக் கூறினார்.  மதுரை கம்பன் கழகத் துணைத்தலைவர் திரு சங்கர சீதாராமன் அவர்கள் வழங்க புதுச்சேரி கம்பன் கழகத் தலைவர் திரு வி பி சிவக்கொழுந்து அவர்களுக்குக் கம்பவள்ளல் விருது வழங்கப்படப் போவதாகக் குறிப்பிடார். 


பேராசிரியர் சொ. சேதுபதி அவர்கள் ஜீவாவைப் பற்றி எழுதிவரும் ”காரைக்குடியில் ஜீவா “ நூல் வெளியிடப்படும் என்று கூறினார். கலெக்டர் சகாயம், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சுதர்சன நாச்சியப்பன்,பழ. கருப்பையா, கவிதாயினி சல்மா, ருக்மணி பன்னீர்செல்வம்,நெல்லை கண்ணன், சுமதி ஸ்ரீ, பழ முத்தப்பன், ஆகியோர் &  இன்னும் பலர் பங்கேற்றுச் சிறப்பிக்கிறார்கள். 




முத்து பழனியப்பன் அவர்களின் நன்றியுரையோடு விழா இனிது நிறைவுற்றது.  


விழாவின் முடிவில் நண்பர் முத்துநிலவனை கம்பன் அடி சூடி அறிமுகத்தோடு சந்தித்து எனது நூல்களை வழங்கி அவரது கம்பன் தமிழும் கணினித் தமிழும் என்ற நூலை ( நூலுக்கு நூல் என்றபடி - எனது நாலு நூலுக்கு ஒரு நூல் . ( அவ்ளோ சின்னம் எனது புத்தகங்கள் :) :)  ) பெற்றுக் கொண்டு வந்தேன். அப்போது கம்பன் அடி சூடியிடம் இவர் நம்ம ஊருக்கு வந்து கம்பன் கழகத்தில் இராமனைப் பற்றிக் குறைகூறிவிட்டுப் போறாரே என்றேன் சிரித்தபடி. அதற்கு கம்பன் அடிசூடி அவர்கள் மந்தகாசமாகப் புன்னகைத்தபடி ”இவர் வெகுநாள் முன்பே கம்பனையும் கார்ல்மார்க்ஸையும் கம்பேர் பண்ணி புக்கே போட்டுருக்கார்.” என்று  சொல்லி அதிர வைத்தார். :) சரி படித்துப் பார்ப்போம் என்று நினைத்திருக்கிறேன். :)  


கம்பரசம் பருக வருக. 

கம்பன் புகழ் வாழ்க.

கன்னித் தமிழ் வாழ்க.


நன்றி- தேனம்மை லஷ்மணன், வலைப்பூ - சும்மாகம்பன் நின்று நிலைப்பது அழகியல் பாடல்களிலா, அறவியல் பாடல்களிலா .



.













நன்றி- தேனம்மை லஷ்மணன், வலைப்பூ - சும்மா

Thursday, February 25, 2016

காரைக்குடி கம்பன் கழகத்தின் மார்ச் மாதக் கூட்டம்

காரைக்குடி கம்பன் கழகத்தின் மார்ச் மாதக் கூட்டம் எதிர்வரும் 5.3.2016 ஆம் நாளன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கம்பன் கழகப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தம் திறமையை வெளிப்படுத்த உள்ளனர். மேலும் இசைப் பட்டிமண்டபம் புதுக்கோட்டை முத்துநிலவன் தலைமையில் நடைபெற உள்ளது. கம்பன் நின்று நிலைப்பது அழகியல் பாடல்களிலே என்ற அணியில் மகா. சுந்தர் வாதாடுகிறார். அறவியல் பாடல்களிலே என்று முனைவர் மு.பாலசுப்ரமணியன் வாதாடுகிறார். எப்பக்கம் என்று நடுவர் தீர்ப்புரைப்பார். இந்நிகழ்ச்சிக்கு காரைக்குடி முத்துப்பட்டணம் நா. வீர குடும்பத்தாரும் கம்பன் அன்பர் ஒருவரும் கொடை தந்து உதவியுள்ளனர். அனைவரும் வருக. எப்போதும் போல் சிற்றுண்டி உண்டு.




Wednesday, February 10, 2016

"தமிழ் இசையின் நுட்பங்களை நிலைக்கச் செய்தவர் கம்பர்'




தமிழ் இசை நுட்பங்களை தனது காப்பியத்தில் புகுத்தி, அந்த இசையை கால காலத்திற்கும் நிலைக்கச் செய்தவர் கம்பர் என முனைவர் அரிமளம் சு. பத்மநாபன் பேசினார்.
காரைக்குடியில் கம்பன் கழகம் சார்பில் மீனாட்சி- பழனியப்பா அறக்கட்டளைச் சொற்பொழிவுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கம்பனில் இசைத்தமிழ் என்ற தலைப்பில் பத்மநாபன் பேசியது: இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழையும் கற்றுச் சிறந்தவர் கம்பர். தொல்காப்பியர் கூறிய பல்வேறு வண்ணங்களையும் தமது பாடல்களில் அமைத்து இசைத்தவர் கம்பர்.
அவரது காலத்தில் யாழுக்கு அடுத்த நிலையில் வீணை சிறப்பிடம் பெற்றிருக்கிறது. அக்காலத்துத் தமிழ் இசையின் நுட்பங்களை தனது காப்பியத்துள் இட்டுக் காலகாலத்திற்கும் நிலைக்கச் செய்த இசைப்பேரறிஞர் கம்பர். இயல்பாக அறியப்பெற்ற கம்பரை இசையோடு பாடிப்பழகினால் அவரது கவித்துவமும், புலமைத்திறமும் இன்னும் சிறப்பாக புலப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா தலைமை வகித்துப் பேசுகையில், இசையோடு தமிழைப் பாடுகிறபோது தான் அதன் உணர்வைச் சிறப்பாக அனுபவிக்க முடியும். திருக்குறளையும் திருமுறையையும் பாடுவதைப்போல் கம்பர் கவியையும் இசையோடு பாடி முத்தமிழின் தரத்தை நடைமுறைப்படுத்துவது நமது கடமை என்றார்.
முன்னதாக கம்பன் கழகச் செயலர் பழ.பழனியப்பன் வரவேற்றுப் பேசுகையில், கம்பரின் காவியத்துள் இடம்பெறும் இசை நுணுக்கங்களைப் பேசுவதோடு அவற்றை ஆவணப் படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றார்.
நிகழ்ச்சியில் சென்னை ஓஷியானிக் எம். எஸ். மெய்யப்பன், கம்பன் கழகத் துணைத் தலைவர் அரு.வே. மாணிக்கவேலு, திரைப்பட இயக்குநர் காரைக்குடி நாரயணன், பேராசிரியர்கள் சே.செந்தமிழ்ப்பாவை, மு.பழனியப்பன், மா. சிதம்பரம், நா.மீனவன், இராஜபாளையம், அறந்தாங்கி, தஞ்சாவூர் கம்பன் கழகத்தார் கலந்து கொண்டனர். கம்பன் கழக துணைச்செயலர் சொ. சேதுபதி நன்றி கூறினார்.

நன்றி- தினமணி நாளிதழ்

Monday, February 1, 2016

காரைக்குடி கம்பன் கழக இலக்கியப் போட்டிகள் - முடிவுகள்

          கம்பன் கழகம், காரைக்குடி                           




                     செய்தி அறிக்கை      நாள்: 1-2-2016

                வணக்கம். நேற்றைய தினம் 31-1-2016 ஆம் நாள் காரைக்குடி கம்பன் கழகத்தின் அனைத்து கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டிகளும், பள்ளிகளுக்கான ஒப்பித்தல் போட்டிகளும் காரைக்குடி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில்  நடைபெற்றன. அது பற்றிய கீழ்க்காணும் செய்தியினை தங்கள் மேலான செய்தித் தாளில் வெளியிட்டு வெற்றி பெற்ற கல்லூரி , பள்ளி மாணாக்கர்கள் பரிசுகளை நேரில் வந்து பெற்றுச் செல்வதற்கு உதவிடுமாறு மிக்க பணிவன்புடன்  வேண்டுகின்றோம்.

                28 கல்லூரி மாணாக்கர்களும், 60 பள்ளி மாணாக்கர்களும் பங்கேற்று, கீழ்க்கண்டவர்கள் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பெற்றனர்.

                கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி மு ஷாஜஹான் கம்பராமாயணத்தில் முதற் பரிசினையும் (ரு 3.500), திருக்குறளில் இரண்டாம் பரிசினையும் (ரூ 1,000) வென்றார். அமராவதிபுதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி இரா. நாச்சாள் திருக்குறளில் முதற் பரிசினையும்  (ரூ 3500), கம்பராமாயணத்தில் இரண்டாம் பரிசினையும் (ரூ1000) வென்றார்.

                ஊக்கப் பரிசுகளை ( தலா ரூ750) பள்ளத்தூர் சீதாலெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி பத்மாராகவி, கைக்குறிச்சி பாரதி கலைக் கல்லூரி சு.சுந்தரவள்ளி, ம.கௌசல்யா, பெங்களூரு ஐ.ஐ.எஸ் திருமூலநாதன், கிருஷ்ணன்கோவில் வி பி எம் எம் மகளிர் கல்லூரி க.வைரமணி ஆகிய  ஆறு பேர்களும் பெற்றனர்.

                பள்ளிகளுக்கான  கம்பராமாயண ஒப்பித்தல் போட்டியில் காரைக்குடி கலைவாணி பள்ளி ம.பானுப்பிரியா, தேவகோட்டை முருகானந்தா நடுநிலைப்பள்ளி சு.அருண்குமார் இருவரும் இரு முதற்பரிசுகளையும் (தலாரூ 1,000),

                தேவகோட்டை புனிதஜான் பள்ளி த.மகாலெட்சுமி, திருப்பத்தூர் நாகப்பா மருதப்பா பள்ளி மு.மீனாம்பாள், கோட்டையூர் சிதம்பரம் செட்டியார் பள்ளி சுப. கோமதி, ,காரைக்குடி கலைவாணி பள்ளி ம.சண்முகப்பிரியா, ஸ்டெனிஸ் செரின், க.சுபலெட்சுமி, பீ.ஜோசி அபர்ணா, சிங்கம்புணரி அன்னை வேளாங்கண்ணி பள்ளி த.ஹரிணி, புதுவயல் வித்யாகிரி பள்ளி வெ.சௌந்தர்யதர்ஷினி, கோ.அபிராமி, கூத்தலூர் புனித செபஸ்தியார் பள்ளி ஜ.கோகிலவாணி, காரைக்குடி ஆசாத் பள்ளி செ.கலைமணி,ஆகிய  பன்னிரண்டு பேர்களும்  இரண்டாம் பரிசுகளையும் (தலா ரூ 250),

                கீழச்செவல்பட்டி மீ சு பள்ளி மா.ஜெகன், கோட்டையூர் சிதம்பரம் செட்டியார் பள்ளி பி மதிவதனி, தேவகோட்டை புனிதஜான் பள்ளி அ.தனலெட்சுமி, கானாடுகாத்தான் மு சித மு சிதம்பரம் செட்டியார் பள்ளி ரா.மணிகண்டன், திருப்பத்தூர் நாகப்பா மருதப்பா பள்ளி மா. சத்யா, சிங்கம்புணரி,அன்னை வேளாங்கண்ணி பள்ளி சு.சிநேகவர்ஷினி ஆகிய ஆறு பேர்களும் ஊக்கப் பரிசுகளையும் பெற்றனர்.

                                                                                                 கல்லூரிகளுக்கு அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சு.ராஜாராம், சே செந்தமிழ்ப்பாவை, இராமசாமி தமிழ்க்கல்லூரி பேராசிரியர்கள் செ.நாகநாதன், இரா.கீதா, குழிபிறை முனைவர் வீ,கே. கஸ்தூரிநாதன், பேராசிரியர் பா தட்சிணாமூர்த்தி ஆகியோரும் பள்ளிகளுக்கு பொன்னமராவதி நல்லாசிரியர் நா திருநாவுக்கரசு, திருப்புத்தூர் சி உஷா, அழகர்கோவில் ஆ.பழனியாயி, மதுரை சு.தொண்டியம்மாள் ஆகியோரும் நடுவர்களாகப் பணியாற்றி பரிசுக்குரியோரைத் தேர்ந்தெடுத்து உதவினர்.

                                                        
                 பரிசுகள் மார்ச் மாதம் 21 ஆம் நாள் திங்கள்கிழமை மாலை  காரைக்குடி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறும் கம்பன் கழகத்தின் இவ்வாண்டுக் கம்பன் திருவிழாவின் முதல் நாளில் மாணாக்கர்களுக்கு வழங்கப்பெறும்.

                  தாங்கள் இதுகாறும் எங்கள் பணிகளில்  காட்டி வந்த உதவிக்கும் ஊக்கத்திற்கும், எங்கள் மனமார்ந்த நன்றியையும் அன்பையும் புலப்படுத்திக் கொள்ளுவதோடு, இனியும் தொடர்ந்து இத்தகு உதவியை தொடர்ந்து நல்கவும்  அன்புடன் வேண்டிக் கொள்ளுகின்றோம்.



                                                      பழ பழனியப்பன்
                                                செயலாளன், கம்பன் கழகம்

                                                   கைபேசி: 94450 22137