கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்/ பதிவு பெற்றது/ பதிவு எண் 38/ 2015/
Wednesday, December 4, 2019
காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் ஆறு ஏழு எட்டு ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கருக்கான ஒப்பித்தல் போட்டி
காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் ஆறு ஏழு எட்டு ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கருக்கான ஒப்பித்தல் போட்டி ஜனவரி நான்காம் தேதி நடைபெற உள்ளது காலை ஒன்பதரை மணிக்கு தொடங்கும் இந்நிகழ்ச்சியில் அனைத்து பள்ளி மாணாக்கர்களும் கலந்து கொள்ளலாம். அறிவிப்பும் பாடலும் கீழே இணைப்பில் உள்ளது வருக கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்ப்போம்
Friday, September 6, 2019
"கம்பவாணர்" கோவிந்தசாமி முதலியார் கம்பனடி சார்ந்தார்.
"என்றுமுள தென்றமிழை இயம்பியிசை கொண்ட கம்பன் புகழ்பாடி நூற்றாண்டு கண்ட "கம்பவாணர்" கோவிந்தசாமி முதலியார் கம்பனடி சார்ந்தார்.
கம்பன் பணிக்கென்றே தம்மை ஒப்புக்கொடுத்து, கம்பன் அடிப்பொடி சா.கணேசன் அவர்களுடன் இணைந்து இவர்செய்த திருப்பணிகள் மறக்கொணாதவை. காரைக்குடி கம்பன் கழகம், கம்பன் பிறந்த தேரழுந்தூரில் விழா எடுத்த முதலாண்டில், கோவிந்தசாமி முதலியாரவர்கள், "கம்பன் ஊர்வலத்தை" ஆமருவியப்பன் ஆலய வாயிலிலிருந்து, "கம்பன் வாழ்க!" எனச் சொல்லித் தொடங்கிவைத்து, நடந்துவந்ததும், மறக்க இயலாதவை. புதுவை மண்ணின் "கம்பநட்சத்திரம்" மண்ணிலிருந்து விண்ணேகி ஒளிரத் தொடங்கிய நாள் இதுவென்று வரலாறு குறித்துக்கொள்ளும்!
அன்னார்க்குப் புகழ்மாலை சூட்டிப் பணிகிறது காரைக்குடி கம்பன் கழகம்!
Tuesday, July 30, 2019
Thursday, July 18, 2019
Tuesday, July 16, 2019
Saturday, March 9, 2019
Subscribe to:
Posts
(
Atom
)