Tuesday, December 29, 2015

2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதக் கூட்ட அழைப்பிதழ்

கம்பன் கழகத்தின் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதக் கூட்டம் எதிர்வரும்  ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது, 


அன்புடையீர்
வணக்கம்
கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும் கம்பன் திருவிழாவிற்கு பல்லாண்டுகளாகப் பெருங்கொடையளித்துப் புரவலராய் விளங்கிய பெருந்தகை, தொழிலதிபர் செட்டிநாட்டசர் டாக்டர் எம்.ஏ. எம் இராமசாமி அவர்களுக்கு நன்றி பாராட்டிப் புகழாரம் சூட்டும் முகமாக புத்தாண்டில் முதற் சிறப்புக் கூட்டம் 9-1-2016 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணன் கோயிலை அடுத்துள்ள கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறஉள்ளது, அவ்வமயம் அவர்களைப் பற்றி திரைப்பட இயக்குநரும் எழுத்தாளரும் ஆன கவிஞர் காரைக்குடி நாராயணன் ஆக்கிய டாக்டர் எம், ஏ.எம் ஒரு சகாப்தம் என்ற நூல் வெளியீடும் அவர்தம் திருவுருவப் படத்திறப்பும் நிகழ்கிறது. அன்பர்கள் யாவரும் கலந்துகொண்டு கன்னித் தமிழ் அமுதம் பருகி மகிழ்வித்திட வருக வருக. 

அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்








Thursday, December 24, 2015

அனைத்து கலை, அறிவியல், பொறியியல், தொழில்நுட்ப, கல்வியியல், கல்லூரிகளுக்கான போட்டி

 வணக்கம்இத்துடன் காரைக்குடி கம்பன் கழகம் காரைக்குடிகல்லுக்கட்டி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் 31-1-2016 ஆம் தேதி நடத்தும்இவ்வாண்டுக்கான தமிழக அனைத்து கலைஅறிவியல்பொறியியல்தொழில்நுட்பகல்வியியல்கல்லூரிகளுக்கான போட்டி அறிக்கையினையும்சிவகங்கைமாவட்ட உயர்நிலைமேல்நிலைப் பள்ளிகளுக்கான ஒப்பித்தல் போட்டிஅறிக்கையினையும் அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.

                 தங்களுக்கு தெரிந்தவர்கள்உறவினர்கள் வீட்டுப் பிள்ளைகளிடம் இவைபற்றி தெரிவித்து  மாணாக்கர்கள் அவர்கள் படிப்புக் கட்டணம்புத்தகங்கள்வாங்கும் செலவிற்கு உதவுகிறாற்போல் அதிக அளவில் ரொக்கப் பரிசுகளைப்பெற்றுப் பயனடைய உதவிடும்படி மிக்க பணிவன்புடன் வேண்டுகின்றோம்.தங்கள்  அறிவிப்பு பெற்றோர்களின் பாரத்தை இம்மழை வெள்ளப் பாதிப்புசமயத்தில் குறைப்பதற்கு பெருமளவில் உதவும்அவர்கள் தங்களுக்கும்தங்கள்பத்திரிக்கைக்கும் நன்றி பாராட்டுவர்.
              
                மேலதிக விபரம் வேண்டுவோர் அல்லது போட்டித் தயாரிப்பிற்கு விவரம்,குறிப்பு வேண்டினால் அஞ்சலட்டையில் பள்ளியா கல்லூரியா என்று குறிப்பிட்டு,தங்கள் வீட்டு அஞ்சல் குறிப்பு எண்ணுடனான முழு இல்ல முகவரியை, “கம்பன் கழகம்காரைக்குடி 2” என்ற முகவரிக்கு எழுதினாலோ அல்லது 94450 22137 என்ற கைபேசிக்கு குறுஞ்செய்தியில் (எஸ் எம் 




எஸ்அனுப்பினாலோஎங்கள் செலவில் அறிக்கைகளை முழு விபரங்களுடன் அனுப்பிவைக்கிறோம் என்ற செய்தியயையும் தெரிவித்து உதவ மிக்க அன்புடன்வேண்டுகின்றோம்.

               தாங்கள் இதுகாறூம் எங்கள் முயற்சிகளுக்கு அளித்துவந்தஉதவிகளுக்கும்  ஆதரவிற்கும் நன்றியும் வணக்கமும் ஏற்றருள்கஇத்தகுநட்பும்உதவியும் இனியும் தொடர அன்போடு நன்றி பாராட்டி வேண்டுவோம்.

                         தமிழ்ப் பணியில் தங்கள் பணிவன்புள்ள


                                     
                                       பழ பழனியப்பன்
                                         (செயலாளன்)-- 

Thursday, December 17, 2015

காரைக்குடியில் கம்பராமாயண திறனாய்வாளர்கள் இலக்கிய அரங்கம்


First Published : 17 December 2015 03:43 AM IST
காரைக்குடியில் கம்பராமாயணத் திறனாய்வாளர்கள் இலக்கியக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
சாகித்ய அகாதெமியும் காரைக்குடி கம்பன் கழகமும் இணைந்து காரைக்குடி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் இக்கருத்தரங்கை நடத்தின. இதில், சாகித்யஅகாதெமி ஆலோசனைக் குழு உறுப்பினர் பேராசிரியர் சொ. சேதுபதி பேசுகையில், படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும் இடையில் இலக்கிய அரங்கம் வாயிலாக உறவுப் பாலம் அமைத்துச் செயல்படும் சாகித்ய அகாதெமி, இந்திய மொழிகளின் வாயிலாக மனிதம் வளர்க்கிற இலக்கிய அவையாகும். உலக மானுடம் பாடிய கம்பன் கவி குறித்துத் திறனாய்வு செய்த தமிழறிஞர்கள் மிகப் பலர். அவர்கள் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள். வ.வே.சு. ஐயர் தொடங்கி கி.வா.ஜ, சொல்லின் செல்வர். ரா.பி. சேதுப்பிள்ளை, ரசிகமணி, ஜஸ்டிஸ் மகாராஜன், அ.ச. ஞானசம்பந்தன், அ.சீ.ரா, எஸ்.ஆர்.கே., ஜீவா போன்றவர்கள் கம்பனை எல்லார் மனங்களிலும் நிறைத்த திறனாய்வாளர்களாவர்.
ரசனை முறையிலும், ஒப்பீட்டு முறையிலும், அறிவியல் கோட்பாட்டு முறையிலுமாகப் பல்வேறு திறனாய்வுப் போக்குகளின் வழி ஏராளமான ஆய்வுகள் நூல்கள் தோன்றக் காரணமாக இருந்தது, காரைக்குடி கம்பன் கழகம்.
இங்கு வந்து பேசி வளர்ந்தவர்களே கம்பனின் திறனாய்வு நூல்களை மிகுதியும் உருவாக்கினர். அவர்களின் பணிகளையும் பார்வைகளையும் சிந்திப்பதற்காகவே இந்த இலக்கிய அரங்கம் என்று குறிப்பிட்டார்.
பின்னர், கம்பராமாயணத் திறனாய்வாளரான ஜஸ்டிஸ் மகாராஜன் குறித்து கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் கூறுகையில், கம்பனின் கவித்துவத்தைக் கற்றோர் மட்டுமின்றி, பாமரரும் உணரும் கம்பன் பாடல்களையே திரும்பத் திரும்ப, பாவனையோடு சொல்லி நடித்தும் காட்டுவார் ஜஸ்டிஸ் மகாராஜன் என்றார்.
கம்பன் புதிய பார்வை என்ற நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்ற பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தனைப் பற்றி பழ.முத்தப்பனும், சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை பற்றி முனைவர் யாழ்.சு. சந்திராவும் ஆய்வுரையாற்றினர்.
கம்பன் கழகத் துணைத் தலைவர் அரு.வே. அண்ணாமலை முன்னிலை வகித்தார். சிங்கப்பூர் தமிழறிஞர் ஸ்ரீ லெட்சுமி கருத்துரையாற்றினார். பேராசிரியர் ம.கார்மேகம், மெய்யாண்டவன், குன்றக்குடி ஆதீனக் கவிஞர் மரு.பரமகுரு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். முன்னதாக பேராசிரியர் மு. பழனியப்பன் வரவேற்புரை ஆற்றினார். முனைவர் செ. செந்தமிழ்ப்பாவை நன்றி கூறினார்.

Thursday, December 3, 2015

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டிகள்

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான இரு பேச்சுப் போட்டிகள். விபரம் இதனுடன் இணைக்கப்பெற்றுள்ளது. எங்கே பார்ப்போம் உங்கள் கல்லூரியில் இருந்து மாணவர்கள் வந்து சேரட்டும்.

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான போட்டிகள்

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான ஒப்பித்தல் போட்டிகள்

பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் இருநிலையில் நடத்தப்படுகின்றன.
பிரிவு -1
வகுப்பு 9 முதல் 12 வரை
யுத்தகாண்டத்தில் இணைக்கப்பெற்ற பாடல் பகுதி

பிரிவு 2
வகுப்பு 6.முதல் 8 வரை

அயோத்தியா காண்டத்தில் இணைக்கப்பெற்றுள்ள பகுதி










காரைக்குடி கம்பன் கழகத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் - சாகித்திய அகாதமியுடன் இணைந்து நடத்தும் இலக்கிய அரங்கம்

காரைக்குடி கம்பன் கழகமும் , சாகித்திய அகாதமியும் இணைந்து காரைக்குடி கிருஷ்ணா திருமண மண்டபத்தில் எதிர்வரும் 12 ஆம் தேதி மாலை ஆறுமணிக்கு கம்பராமாயணத் திறனாய்வாளர்கள் என்ற தலைப்பிலான இலக்கிய அரங்கத்தை நடத்துகின்றன. அதன் அழைப்பு பின்வருமாறு அனைவரும் வருக.

நிகழ்ச்சிக்கு சிற்றுண்டி தந்து உதவுபவர்
காளைாயர் மங்கலம் திரு எஸ் ஆர் எம் கண்ணப்பன் அவர்கள் 

காரைக்குடி கம்பன் கழகம் நடத்திய நவம்பர் மாதக் கூட்டம் (2015)





காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் ரசிகமணி டிகேசி பிள்ளைத்தமிழ் என்ற நூல் நவம்பர் மாதம் நடைபெற்ற  கூட்டத்தில் வெளியிடப்பெற்றது. இவ்விழாவிற்கு நீதிபதி மாண்பமை இராம சுப்பிரமணியனார் தலைமை தாங்கினார். விழாச் சிறப்புரையை ஞானவாணி தூத்துக்குடி இளம்பிறை மணிமாறன் அவர்கள் வழங்கினார். ஏற்புரையை திருமதி வள்ளி முத்தையா வழங்கினார்.  வரவேற்புரையைக் கம்பன் கழகச் செயலர் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் வழங்கினார். 

Tuesday, October 27, 2015

காரைக்குடி கம்பன் கழகத்தின் நவம்பர் மாதக் கூட்டம் 2015


                                              கம்பன் கழகம், காரைக்குடி                                            
                                                         61 ஆம் கூட்டம்
அன்புடையீர்
வணக்கம்
கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமி;ழ் வளர்க்கும் கம்பன் கழகத்தின் நவம்பர் மாதக்கூட்டம் 7-11-2015 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணன் கோயிலை அடுத்துள்ள கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இறைவணக்கம்          - செல்வி. எம். கவிதா
வரவேற்புரை:                  திரு. கம்பன் அடிசூடி
தலைமை உரையும்
                                                கவிதாயினி வள்ளி முத்தையா எழுதிய உமாபதிப்பக                                                     வெளியீடான ரசிகமணி டி.கே.சி பிள்ளைத்தமிழ்                                                                நூல்வெளியீடும்
                                         சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தகைமிக                    
                                                  நீதியரசர் வி. இராம சுப்பிரமணியம்

நூல் பாராட்டும் கம்பரசிகமணி உரையும்
                                                 நாவுக்கரசி, ஞானவாணி திருமதி                                                                                               இளம்பிறை மணிமாறன்

ஏற்புரை: கவிதாயினி திருமதி வள்ளி முத்தையா

நன்றியுரை: பேராசிரியர் செந்தமிழ்ப்பாவை

கம்பன் புகழ் பருகிக் கன்னித்தமிழ் வளர்;க்க அன்பர்கள் யாவரும் வருக.


அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்

நிகழ்ச்சி உதவி
1.10.2015 தம் எண்பதாவது பிறந்த நாள் கண்டு மகிழ்ந்த காரைக்குடி திரு. மெ. செ. ராம. மெய்யப்ப செட்டியார் திருமதி அழகம்மை ஆச்சி தம்பதியருக்குப் பல்லாண்டு. பல்லாண்டு

காரைக்குடி திரு. எஸ். கோபால் செட்டியார், திருமதி வெ. தருமாம்பாள் ஆச்சி தம்பதியரின் புதல்வர். 23.8.2015 தன் இருபத்தி ஐந்தாவது பிறந்தநாள் கண்டு மகிழ்ந்த செல்வன் ஜி. அருணாசலம் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் பல்லாண்டு, பல்லாண்டு. 

Thursday, October 15, 2015

அந்தமானுக்கு வர விரும்புபவர்கள் வரலாம்.

றக்குறைய ஒரு நூறு அன்பர்கள் ஆய்வாளர்கள் அந்தமானில் கால் பதித்து கம்ப ஆய்வினை நிகழ்த்த முன்வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

இன்னும் வர எண்ணுபவர்களுக்கு இன்னும் வாசலைத் திறந்து வைக்கிறோம். 

திரு. கிருட்டிண மூர்த்தி, 9434289673 (அந்தமான்) அவர்களுடன் தொடர்பு கொண்டுத் தாங்கள் கம்ப ஆய்வினை நிகழ்த்த அந்தமான் வரலாம். 

Saturday, October 10, 2015

அந்தமான் செல்லும் வாய்ப்பினை நிறைவுசெய்கிறோம்.

காரைக்குடி கம்பன் கழகம்  அந்தமான் கம்பன் கழகத்துடன் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு வருகை தருவோர் பட்டியல் இறுதி செய்யப்பெற்று விட்டது. வருகை தர ஒப்புதல் அளித்த அனைவருக்கும் நன்றிகள்.
கட்டுரை மட்டும் அனுப்ப விரும்புவோர் மட்டும் இனித் தொடர்க. 

அந்தமானுக்கு வருகிறார்கள். கம்பன் காட்டிய அழகு பற்றி கட்டுரைக்க, கேட்க, ரசிக்க

FINAL LIST AS On 10 10 2015 FOR ANDAMAN Conference


1.  Mrs B. NAGAJOTHI   (F) Chinnamani Balakrishnan        
2. Mr K.M. KAMARAJAN  (F) Mariappa Nadar                     
3. Mr KANNAN PRASAD (F) Kamarajan                              

4. Mr N.THIRUNAVUKKARASU (F) Narayanan                 
5.Mr B.NEHRUJI (F) Balasubramaniam                                 

6.Mrs CHANDRA (H) Subramanian                                       
7.Ms.ARUNA PRIYADHARSHNI (F) Subramanian             

8.Mr M.PALANIAPPAN (F) PL.Muthappan                          
9.Mr.R.VELLASAMY    (F) Ramasami                                

10.Mrs RANI GANESAMANI (F) Muthiah                         
11.Mrs SAKUNTALA (F) KR Arumugam                           
12.Mr RAJARAM (F) Subramanian                                      

13.Mrs SENTHAMIZH PAVAI RAMANATHAN              
           (F) Sedhuraman                  
14.Ms GEETHANJALI RAMANADHAN                             
           (F) Ramanadhan Mahalingam    

15.Mr NEELAKANDA PILLAI THANUMALAYA
          PERUMAL PILLAI                                                   
           (F) Thanumalaya Perumal Pillai
16.Mrs KOLAMMAL DESIAPPAN NAGAMMAL          
            (H) Neelakanda Pillai
17.MsNAGALEKSHMI NEELAKANDA PILLAI KOLAMMAL 
        (F) Neelakanda Pillai                   
18.Ms BHARATHY (F) Neelakanda Pillai                           

19.Mr NALLA TAMBI (F) Kalimuthu                                 
20.Mrs MALLIKA (H) Nalla Tambi                                     

21.Mr SUBRAMANIAN Dr G (F) R Govindasami              
22.Mrs GEETHA RANI (F) RAJAGOPALAN                     

23.Mr CHELLAPPAN (F) Kasi Viswanathan                      

24.Mr M.SUBRAMANIAN (F) Meenakshisundarm RM    
25.Mr KANNAN (F) Meenakshisundaram                         
26.Mrs SEETHALAKSHMI (H) Kannan                           

27.Mr PALANIAPPAN (F) Palaniappa                              
28.Mrs THEIVANAI PALANIAPPAN (H) Palaniappan       

29. Mrs T A Laksmi (H) Rajan  Singapore  
30. mrs L ALAMELU (F) Ramaswamy Venkatachalam  


31. Mr VRIDHACHALEM SUBRAMANIAM       
           (F) VridhachalemPillay
32. Mrs VASANTHA SUBRAMANIAM             
           (H) Subramaniam

33. Mr K BHOOPATHY  (F) Karuppannan 
34. Mr S SATHASIVAM  (F) Subramani
35. Mrs M JAYALAKSHMI (H) Kanakarathinam  
36. Ms S MANGALESWARY (F) K Sathaiah 
37. Mr M. CHITHAMBARAM (F) C.P.Manickam  
38. Mr T K VEDHARAJA (F) V Krishnasabapathy 
39. Mrs V R JEYASALA (F) Vairavan Ramaswami 
40. Ms. P S SELVAMEENA (F) P Subramanian 
41. Mr M DURAI (F) A Malayandi 
42. Mr K BALUSAMY (F) Kuppanagounder

43.Mrs SUDHAMATHI R (H) Selvaraj Samuel   
44. Mr VARUN (F) Selvaraj Samuel 

45. Mrs PARAMESWARI  (F) Chinniah M 
46. Mr KRISHNAMURTHY M S  (F) K Munisamy 
47. Mr K. MURUGESAN (F) Karuppannan 


தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் அவர்களின் பேச்சுரை

இலக்கிய அமைப்புகள் உருவாக வேண்டும், பிரியக்கூடாது!:தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்

First Published : 04 October 2015 04:36 AM IST
தமிழை வளர்ப்பதற்கு ஊருக்கு ஊர் புதிது புதிதாக இலக்கிய அமைப்புகள் உருவாக வேண்டுமே தவிர, இருக்கின்ற இலக்கிய அமைப்புகள் பிரிந்து பிரிந்து செயல்படக் கூடாது என தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் வலியுறுத்தினார்.
காரைக்குடி, கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணா கல்யாண மகாலில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற காரைக்குடி கம்பன் கழகத்தின் நிகழ்ச்சியில் புதுச்சேரி கம்பன் கழகச் செயலர் கம்ப காவலர் தி. முருகேசனின் நினைவேந்தல் கூட்டத்தில் அவர் மேலும் ஆற்றிய உரை:
தமிழகத்தில் ஒரு காலத்தில் தீ பரவட்டும் என்ற கோஷம் எழுந்தபோது, "கம்பன் அடிப்பொடி' தலைமையில் இதே காரைக்குடி மண்ணில்தான் "கம்ப காதை தீயென பரவட்டும்' என கம்பன் புகழ் பாடி தமிழ் வளர்க்கும் கூட்டம் வீறுகொண்டு எழுந்தது.
கம்பன் அடிப்பொடியின் தலைமையில் கம்பன் திருநாளை விழாவாகக் கொண்டாடியதும், தமிழ்த் தாய்க்கு ஆலயம் எழுப்பியதும் இதே காரைக்குடி மண்ணில்தான்.
பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கம்ப காதையின் மூலம் தமிழ்ப் பற்றை வளர்த்த காரைக்குடி கம்பன் அறநிலை பிரிந்து கிடப்பது தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் சோதனை. 2004-இல் "தமிழால் இணைவோம்; தமிழுக்காக இணைவோம்' என்கிற கோஷத்தை தில்லியில் கூடிய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டில் எழுப்பிய தினமணியால் கம்பன் கழகங்களின் தாய்க் கழகமான கம்பன் கழகம் பிரிந்து கிடப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தினமணி ஆசிரியராக பொறுப்பேற்ற கடந்த 8 ஆண்டுகளாக, எங்கெங்கு தமிழகத்தில் இலக்கிய அமைப்புகள் தங்கள் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கின்றனரோ, அங்கெல்லாம் பணிகளுக்கு இடையேயும் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளதன் காரணம், தமிழ் அமைப்புகள் உற்சாகமடையட்டும், தமிழ் இலக்கியப் பணியைத் தொடரட்டும் என்பதற்காகத்தான். தமிழகத்தில் ஊருக்கு ஊர் தமிழ் இலக்கிய அமைப்புகள் உருவாக வேண்டும்.
இலக்கியம் பேசப்பட வேண்டும். அதன்மூலம், அடுத்த தலைமுறை இலக்கியப் பேச்சாளர்கள் உருவாக வேண்டும். மக்களுக்குத் தமிழ்ப்பற்றும் இலக்கியத்தின்பாற்பற்றும் ஏற்பட வேண்டும் என்பதுதான் தினமணியின் குறிக்கோள்.
இலக்கிய அமைப்புகளின் எண்ணிக்கை கூடுதலாக வேண்டுமே தவிர தற்போதுள்ள இலக்கிய அமைப்புகள் இரண்டாகப் பிரிவது என்பது ஏற்புடையதல்ல.
செயல்பட்டு கொண்டிருக்கின்ற தமிழ் இலக்கிய அமைப்புகள் பிரிவது தமிழுக்கு பலமல்ல என்பதை பிரிந்திருக்கும் அமைப்புகளின் இரு தரப்பினரும் உணர வேண்டும்.
தமிழ் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கால கட்டத்தில் இருக்கும்போது, தமிழ் அமைப்புகளில் ஏற்படும் சிறு பாதிப்பு கூட தமிழைப் பாதிக்கும். இதனால், வருங்காலத்தில் தமிழ் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே தமிழ் அமைப்புகள் பிரச்னையை பேசித் தீர்க்க வேண்டுமே தவிர, மோதித் தீர்க்கக்கூடாது.
புதுவையில் கம்பன் விழாவை அரசு விழாவாக நடத்திய பெருமை புலவர் அருணகிரி, பெரியவர் கோவிந்தசாமி முதலியார், முருகேசன் ஆகிய மூவரையும் சாரும். புதுவை கம்பன் கழகத்துக்கு முருகேசன் ஆற்றிய பணியானது அளப்பரியது.
இலக்கிய விழாக்களுக்கு புதுவையைப் போல தமிழகத்திலும் அரசு நிதியுதவி அளிக்கவேண்டும். இலக்கிய அமைப்புகள் கூடி விவாதிக்கவும், கூட்டம் நடத்தவும் இலவசமாக சிற்றரங்குகளை கட்டித் தர வேண்டும். தமிழ் வாழத் தமிழ் இலக்கிய அமைப்புகள் அவசியம். ஆகையால், இலக்கிய அமைப்புகளுக்கு அரசு ஆதரவு தர வேண்டும். இலக்கியப் பேச்சாளர்களுக்கு விருது தரும் அரசு, இலக்கிய அமைப்புகளுக்கு விருது தருவதில்லை. அவர்களுக்குத்தான் கம்பன், வள்ளுவன், பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் பெயரில் வழங்கப்படும் விருதுகளை வழங்கி கெளரவிக்க வேண்டும் என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.
நிகழ்ச்சிக்கு, கம்பன் கழகத் தலைவர் பழ. பழனியப்பன் வரவேற்றார். இதில், துணைத் தலைவர் மாணிக்கவேல், கவிஞர் அப்பாச்சி சபாபதி, சரவணச்செல்வன், வித்யாலட்சுமி ஆகியோர் பேசினர். பேராசிரியர் மா. சிதம்பரம் நன்றி கூறினார்.

திருமிகு பர்வீன் சுல்தான அவர்களின் கம்ப கவிதை பற்றிய பேச்சு - செய்தி - நன்றி - தினமணி

அன்பை வலியுறுத்தும் காவியமே கம்ப ராமாயணம்:பேராசிரியை பர்வீன் சுல்தானா

First Published : 04 October 2015 04:35 AM IST
அன்பையும், பாசத்தையும் வலியுறுத்தும் காவியமாக கம்ப ராமாயணம் உள்ளது என, கல்லூரி பேராசிரியை இ.சா.பர்வீன் சுல்தானா தெரிவித்தார்.
காரைக்குடி கம்பன் கழகத்தின் 60-ஆம் மாதக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கம்ப (க)விதை எனும் தலைப்பில் அவர் பேசியதாவது:
தமிழர் பாரம்பரியத்தில் வீட்டின் நிலைக் கதவு வைக்கும்போதும், கோபுரக் கலசங்களிலும் விதையை வைப்பது வழக்கம். உலகின் கடைசி உயிர் வாழ்வதற்குரிய உணவை விதையாக விட்டுச்செல்லும் மரபு, தமிழர்களுக்கு மட்டுமே உரித்தானது.
இலக்கியவாதிகள் சமூகத்தில் ரசவாத மாற்றத்தை ஏற்படுத்திட முடியுமா என்றால், முடியும் என்பதற்கு கம்பரும், பாரதியும், பாரதிதாசனும் எடுத்துக்காட்டாக உள்ளனர். விதைத்தவன் தூங்கலாம், விதைகள் தூங்காது.
சொல்லில் உள்பொருளை பொதித்து வைப்பதற்கே கம்ப சூத்திரம் எனப் பொருள். கயிற்றில் மஞ்சள் தடவி பெண்கள் கழுத்தில் அணிந்தால் தாலியாகிவிடும். அதுபோலவே கம்பரும் தனது கவிதையில் சூத்திரத்தை விட்டுச் சென்றுள்ளார்.
கம்பரின் கவிதையைப் படித்தால் நமக்குள் பெரும் மாற்றம் நிகழும். கம்பரின் பாட்டிலே எல்லையற்ற பொருள் இருப்பதை பாரதி உணர்த்துகிறார். எனவே, உள்பொருள் விதையைத் தேடி வருங்காலத் தலைமுறைக்காக விதைப்பது அவசியம்.
கம்பர் ஒரு பாத்திரத்தைப் படைக்கும்போது, அவரை ஆட்கொண்டுவிடும். பின்னர், அதில் கம்பர் வெற்றி கொண்டு தனது கருத்தை கூறுவார். தாடகை வதத்தில், ராமர் வில் முதன்முதலாக புறப்பட்டதை சொல்லுக்கு இணையாக கம்பர் கூறுகிறார். தாடகை மீது அம்பு ஊடுருவிச் செல்வதை கல் மீது ஊடுருவுவதாக உருவகப்படுத்துகிறார்.
வாலி வதையின்போது, வாழைப்பழத்தில் ஏற்றப்பட்ட ஊசி போல அம்பு பாய்ந்து நின்றதாகக் கூறுகிறார். ராமரின் அம்பு கல் போன்ற தாடகை உடலை துளைத்துச் சென்றதால் அது வதம். ஆனால், பழம் போன்ற வாலி நெஞ்சில் குத்தி நின்றதால் அது முக்தியானது. கம்பரின் அனைத்து கதாபாத்திரங்களும் அவ்வப்போது வெளிப்படும்போது நம்மால் உணரமுடியும். கம்ப ராமாயணத்தில் அன்பை வலியுறுத்தும் வகையிலேயே தாய், மகன், சகோதரன், தங்கை, மனைவி, கணவர் என அனைத்துப் பாத்திரங்களையும் கம்பர் படைத்திருக்கிறார்.
அன்பால் ஈர்த்தல் என்பதே புத்திசாலித்தனம். நன்றியோடிருப்பவர்க்கு இயற்கை உதவும் என்பதை கம்பர் வலியுறுத்துகிறார். அன்புக்குரிய சக்தியை கம்ப ராமாயணம் அளித்து, நம்மை அறிவுறுத்தி, வழிநடத்துகிறது என்றார்.