காரைக்குடி கம்பன் கழகமும், கிருஷ்ணா கல்யாண மண்டபமும் இணைந்து, ஆடி மாத ஆன்மீக இலக்கிய நிகழ்ச்சியை ஒரு வாரம் நடத்தின. கடந்த ஆறாம் தேதி முதல் நடைபெற்ற இவ்விழாவில் முதல்நாள் (6.8.2016) இராமனின் எவ்வண்ணம் செம்மை சேர் வண்ணம் எவ்வண்ணம் என்ற தலைப்பில் பட்டிமண்டபம் நடைபெற்றது. இதற்குப் பேராசிரியர் பாகை கண்ணதாசன் அவர்கள் தலைமையேற்றார். கைவண்ணம் என்ற அணியில் புவலர் பாரதிதாசன், முனைவர் பாரதி அழகப்பன் ஆகியோர் வாதிட்டனர். கால்வண்ணம் என்ற அணியில் புலவர் அழ. பூபதி, கவிஞர் ஜோதி சுந்தரேசன் ஆகியோர் வாதிட்டனர். இதனைத் தொடர்ந்து 7.8.2016 அன்று சேக்கிழார் என்ற தலைப்பில் மதுரை, பேராசிரியர் யாழ்.சு சந்திரா அவர்கள் உரையாற்றினார். 8.8.2016 ஆம் நாளன்று, கவிஞர் பெர்னாட்ஷா சுந்தரர் என்ற தலைப்பில் பேசினார். 9,8,2016 அன்று பேராசிரியர் பழ. முத்தப்பன் அவர்கள் மாணிக்கவாசகர் பற்றிப் பேசினார். அன்று உறையூர் திருவாதவூரார் திருவாசக முற்றோதல் குழவினாரால் திருவாசகம் இசைக்கப்பெற்றது. 10.8.2016 அன்று கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள் ஞானசம்பந்தர் என்ற தலைப்பில் உரையாற்றினார். 11.8.2016 அன்று காசி-ஸ்ரீ அரு. சோமசுந்தரம் அவர்கள் திருநாவுக்கரசர் பற்றி உரை நிகழ்த்தினார். 12.8.2016 அன்று பேராசிரியர் செந்தமிழ்ப்பாவை அவர்கள் ஆண்டாள் பற்றி உரை நிகழ்த்தினார். நாள்தோறும் திருமுறை, நாலாயிரப் பாடல்களைவ செல்வி கவிதா, திருமதி வள்ளி பாலகிருஷ்ணன் ஆகியோர் இசைத்தனர்.




No comments :
Post a Comment